நா. வானமாமலை

தமிழறிஞர்

நா. வானமாமலை (1917 - 1980), . தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிசுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.[1]இவர் தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்குவதற்காக 1969-ல் ஆராய்ச்சி என்னும் ஆய்விதழைத் தொடங்கினார்.[2]

நா. வானமாமலை
நகராட்சி உறுப்பினர்
பதவியில்
? – ?
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
பதவியில்
? – ?
முன்னவர் ?
பின்வந்தவர் ?
இந்திய பொதுவுடமைக் கட்சி மாநிலக் கல்விப் பிரிவு பொறுப்பாளர்
பதவியில்
? – ?
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 7, 1917(1917-12-07)
நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டம்,
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 2 பெப்ரவரி 1980(1980-02-02) (அகவை 62)
கோர்பா,
பிலாஸ்பூர் மாவட்டம்,
மத்தியப் பிரதேசம்
(தற்போது கோர்பா மாவட்டம், சத்தீஸ்கர்-இல்), இந்தியா
குடியுரிமை இந்தியர்
தேசியம் தமிழர்
பெற்றோர் திருவேங்கடம் (தாய்)
நாராயணன் (தந்தை)
படித்த கல்வி நிறுவனங்கள் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி
அமெரிக்கன் கல்லூரி, மதுரை
பணி எழுத்தாளர்
பட்டப்பெயர்(கள்) நா.வா.

பிறப்புதொகு

தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் திருவேங்கடம்-நாராயணன் இணையருக்கு மகனாக திசம்பர் 7, 1917 அன்று பிறந்தார் வானமாமலை.

கல்விதொகு

பணிதொகு

இலக்கியப்பணிதொகு

இயக்கச் செயல்பாடுகள்தொகு

தன் சொந்த ஊரான நாங்குனேரி வட்டாரத்தின் விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகச் செயலாற்றி வந்த வானமாமலை, தன் இயக்கச் செயல்பாடுகளுக்காக இருமுறை (1948, 1970) சிறை வாசத்தை அனுபவத்தார். 1950-ம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியினர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மீளவிட்டானில் சரக்கு ரயில் கவிழ்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், ‘நெல்லை சதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் கா. பாலதண்டாயுதம் போன்றவர்கள் இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தச் சதிச் சம்பவத்தில் நா.வா. விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டார். நில மீட்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்தார்.[3]

ஆக்கங்கள்தொகு

கதைத் தொகுப்புகள்தொகு

 • ஐவர் ராசாக்கள் கதை
 • கட்டபொம்மு கூத்து
 • கட்ட பொம்மன் கதைப்பாடல்
 • காத்தவராயன் கதைப்பாடல்
 • கான்சாகிபு சண்டை
 • முத்துப்பட்டன் கதை
 • வீணாதிவீணன் கதை

நூல்கள்தொகு

 • தமிழர் வரலாறும் பண்பாடும்
 • தமிழ்நாட்டில் ஜாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
 • வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
 • தமிழர் பண்பாடும் தத்துவமும்
 • பழங்கதைகளும் பழமொழிகளும்

நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகள்தொகு

இவரது நாட்டுடையாக்கப்பட்டுள்ள 22 நூல்களின் பட்டியல்[4]:

 1. இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
 2. இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
 3. உயிரின் தோற்றம்
 4. உரைநடை வளர்ச்சி
 5. ஐவர் ராசாக்கள் கதை
 6. கட்டபொம்மு கூத்து
 7. காத்தவராயன் கதைப்பாடல்
 8. கான்சாகிபு சண்டை
 9. தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டம்
 10. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
 11. தமிழர் நாட்டுப்பாடல்கள்
 12. தமிழர் பண்பாடும் தத்துவமும்
 13. தமிழர் வரலாறும் பண்பாடும்
 14. பழங்கதைகளும், பழமொழிகளும்
 15. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
 16. மக்களும் மரபுகளும்
 17. மார்க்சீய அழகியல்
 18. மார்க்சீய சமூக இயல் கொள்கை
 19. முத்துப்பட்டன் கதை
 20. வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
 21. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
 22. Studies in Tamil Folk Literature

மறைவுதொகு

அன்றைய பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்த (தற்போது சத்தீஸ்கர் மாநிலம்) கோர்பா எனும் ஊரில், தன் மகள் வீட்டில் தங்கியிருந்த வானமாமலை, 2 பிப்ரவரி 1980 அன்று தன் 62-ஆம் அகவையில் மறைந்தார்.

புகழ்தொகு

வானமாமலை மறைந்து ஏழு மாதங்களுக்குப் பின் 13 செப்டம்பர் 1980 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவருக்கு '‘இலக்கிய கலாநிதி' (முனைவர்) பட்டம் வழங்கியது.[5][3]

மேற்கோள்கள்தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "மக்களின் பேராசிரியர் நா.வானமாமலை". Hindu Tamil Thisai. 2021-06-14 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "About". பேராசிரியர் நா. வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை (in ஆங்கிலம்). 2016-09-29. 2022-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 4. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-13.htm
 5. "மறைந்தும் மறையாத மலை - வானமாமலை". Dinamani. 2022-10-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._வானமாமலை&oldid=3527602" இருந்து மீள்விக்கப்பட்டது