விக்டர் ஹியூகோ
விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார். பிரான்சில் இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய கவிதை, நாடகம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது. புதினங்கள் இரண்டாம் நிலையே. இவரெழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் லே மிசராப் (Les Misérables), நோட்ரே-டேம் டி பாரிஸ் (Notre-Dame de Paris) என்னும் புதினங்கள் பிரான்சுக்கு வெளியே பெயர் பெற்றவை. இவரது இளமைக் காலத்தில் தீவிரமான பழமைவாதியாக இருந்தபோதும், பிற்காலத்தில் இடதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்தார். இவர் குடியரசுவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரது ஆக்கங்கள், அவரது காலத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும், கலைப் போக்குகளையும் காட்டிநின்றன. இவரது நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறை மேடை நாடகமாக அரங்கேறின. திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டன. இவரது படைப்புகள் சுயநலமற்ற, தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும் எடுத்துக்கூறின.
விக்டர் ஹியூகோ Victor Hugo | |
---|---|
விக்டர் ஹியூகோ, 1883 | |
பிறப்பு | பெசான்சோ, பிரான்ஸ் | பெப்ரவரி 26, 1802
இறப்பு | மே 22, 1885 பாரிஸ், பிரான்ஸ் | (அகவை 83)
தொழில் | கவிஞர், நாடகாசிரியர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், காட்சிக் கலைஞர், அரசியலாளர், மனித உரிமைகள் ஆர்வலர் |
இலக்கிய இயக்கம் | புனைவியம் |
கையொப்பம் | |
வாழ்க்கை
தொகுஇவர் பிரான்சின் பெசன்கான் என்ற இடத்தில் 1802இல் பிறந்தார். இவரின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர்.
பள்ளிக்கல்வி முடித்து சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. இதற்கு இவரது அம்மாவின் முழு ஆதரவும் இருந்தது.
பத்திரிக்கையும், எழுத்தும்
தொகுஇவர் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கித் தனது கவிதைகளையும் தனது நண்பர்களின் எழுத்தையும் அதில் வெளியிட்டார். தனது முதல் கவிதை நூலை 1821-ல் வெளியிட்டார். முதல் நாவல் 1823-ல் வெளிவந்தது. தொடர்ந்து எண்ணற்ற நாடகங்களும் வெளிவந்தன.
இவரது கவிதைகளில் லே கன்டம்பிளேஷன்ஸ் மற்றும் லா லெஜன்டே லே சீக்ளெஸ் ஆகியவை மிகவும் போற்றப்பட்டன. லே மிஸரபிள்ஸ், நோட்ரே-டேம் டி பாரீஸ் ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இளம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணத்தில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், 10-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.
ஹியூகோவின் எழுத்துக்கள் எளிய மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை, துயரங்கள், வேதனைகளை எடுத்துக் கூறின. முறையான வரிவிதிப்பு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சமூக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான வாழ்க்கை ஆகியவற்றுக்காகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடினார்.
அரசியல் நிலைப்பாடு
தொகுஹியூகோ தனது படைப்புகளில் 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் நடைபெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து தெரிவித்துள்ளார். தனது இலக்கிய செல்வாக்கைச் சமூக மாற்றங்கள், முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தினார்.
1848-ல் நடைபெற்ற தேர்தலில் இவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1849-ல் ஏழ்மைக்கு எதிராக இவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றத்தில் மக்களாட்சி போய் மீண்டும் குடியாட்சி நிறுவப்பட்டது.
அதை எதிர்த்து மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இதனால் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டி வந்தது. ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் இடைவிடாமல் குரலெழுப்பினார். தனது நாவல்களையே இவர் தனது போராட்ட ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்.
ஆன்மீகப்பார்வை
தொகுஹியூகோவின் மத கருத்துக்கள் அவரது வாழ்க்கையின் போக்கை தீவிரமாக மாற்றியது.அவரது இளமை காலத்தில் மற்றும் அவரது தாயின் உந்துதலின் கீழ், அவர் ஒரு கத்தோலிக்கராக அடையாளம் கண்டு, திருச்சபைக்கும் மற்றும் அதன் அதிகாரத்திற்கு மரியாதை காட்டிம்படி ஆனது. அதில்லிருந்து அவர் கத்தோலிக்கர் அல்லாதவராகவும், அதிக அளவில் கத்தோலிக்க-எதிர்ப்பும் மற்றும் மதகுருக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.அவர் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் அவர் ஆவியுலகத் தொடர்பைப் பெற்றார் ஒரு கண்க்கெடுப்பாளர் 1872 ஆம் ஆண்டில் ஹியுகோவை ஒரு கத்தோலிக்கரா என்று கேட்டார்? இதற்கு ஹியூகோ அவர்கள், "கத்தோலிக்கர் இல்லை நான் ஒரு பகுத்தறிவாளன் (சுதந்திர சிந்தனையாளன்)" என்று பதிலளித்தார்.[1]
1872 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹியூகோ கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான அவரது எதிர்ப்பை இழந்ததில்லை. முடியாட்சியை அடக்குமுறையின் கீழ் தேவாலயங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமைக்கு அலட்சியமாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.ஹியூகோவின் புத்தகங்கள் தேவாலயங்களின் தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அவரது புத்தகங்களும் உள்ளது என்று அறிந்ததன் மூலம் அவர் சோகமாக இருந்தார்.
ஹியூகோவின் கண்க்குப்படி கத்தோலிக்க செய்தி ஊடகத்தில் Les Misérables மீது 740 தாக்குதல்களைக் எதிர்கொண்டது.[2] ஹியூகோவின் மகன்கள் சார்லஸ் மற்றும் பிரான்சுவா-விக்டர் இறந்துவிட்டால், அவர்கள் ஒரு சிலுவையோ அல்லது பூசாரிலோ இல்லாமல் புதைக்கப்படுவார்கள் என்று அவர் வலியுறுத்தினார். அவரது விருப்பத்திற்கு, அவர் தனது சொந்த மரணம் மற்றும் இறுதி சடங்கு பற்றிய அதே நிபந்தனைகளையும் செய்தார்.[3]
ஹியூகோவின் பகுத்தறிவுவாதம் Torquemada (1869, சமய முரண்பாடு பற்றி) போன்ற கவிதைகளில் காணப்படுகிறது, போப் (1878, மத குருமார்கள்), மதங்கள் மற்றும் மதம் (1880, தேவாலயங்களின் பயனை மறுத்து) மற்றும், சாத்தான் மற்றும் கடவுளின் முடிவு (முறையே 1886 மற்றும் 1891 ஆம் ஆண்டில், கிறித்தவ மதத்தை ஒரு வினோத மிருகமாகவும், ஒரு தேவதையை பகுத்தறிவுவாதமாகவும் குறிப்பிடுகிறார்). வின்சென்ட் வான் கோக், "ஜுவல்ஸ் மிஷெலட் வாயிலாக, உண்மையில் ஹியூகோ வருகிறார், மதங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் கடவுள் இருக்கிறார்" என்று குறிப்பிடுகிறார்.[4]
ஓவியங்கள்
தொகுஹியூகோ 4,000 க்கும் அதிகமான ஓவியங்களை உருவாக்கினார் . முதலில் ஒரு சாதாரண பொழுதுபோக்காக ஓவியம் வரைய ஆரம்பித்தார் பின்னாளில் ஓவியம் வரைவது முக்கியமான ஒன்றாகியது மேலும் அவர் நாடுகடத்தப்படும் முன் எழுதுவதை முழுமையாக நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத்தொடங்கினார்.
1848 மற்றும் 1851 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவரது ஓவியங்கள் வரைந்தது பிரத்யேக படைப்பாக அமைந்தது.
ஹியூகோ காகிதங்கள் மட்டுமே ஓவியங்கள் வரைய பயன்படுத்தினார், மற்றும் ஒரு சிறிய அளவில்; பொதுவாக இருண்ட பழுப்பு அல்லது கருப்பு பேனா மற்றும் மை, சில நேரங்களில் வெள்ளை கோடுகள், மற்றும் அரிதாக ஓவியங்கள் நிறத்துடன் இருக்கும். அவரது உயிர்வாழும் வரைபடங்கள் வியக்கத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு, "நவீன" பாணி மற்றும் செயல்பாட்டில்,மிகுந்த கலைநுட்பம் மற்றும் சுருக்கம் வெளிப்பாடு பற்றிய சோதனை நுட்பங்களை முன்னிலைப்படுத்துவதாக இருக்கின்றன.
ஹியூகோ அவர்கள் குழந்தைகள் வரைய பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்த எப்போதும் தயங்கியதில்லை. ஸ்டென்சில்கள், மைகள்,பட்டுகள் மற்றும் கறை, சரிகை தோற்றங்கள்,மடிப்புகள் அல்லது அலிப்பான்கள், அடிக்கடி வத்திக்குச்சியில் உள்ள கரி அல்லது பேனா, தூரிகைக்கு பதிலாக தனது விரல்களை பயன்படுத்த என்றைக்கும் தயங்கியதில்லை.
அவர் விரும்பிய விளைவுகளை பெற, சில நேரங்களில் அவர் காபி அல்லது புகையிலையின் சாம்பல் கூட பயன்படுத்துவார். ஹியூகோ பெரும்பாலும் ஓவியங்கள் வரைய தனது இடக்கையை பயன்படுத்தினார் மேலும் காகிதத்தை பார்க்காமலேயே ஓவிங்களை வரையும் ஆற்றல் மிக்கவராக இருந்தார்.
ஹியூகோ தனது கலைப்படைப்பை பொதுமக்களிடமிருந்து கொண்டு செல்லாமல் மறைவாகவே வைத்திருந்தார், முக்கிய காரணம் அது அவருடைய இலக்கிய பணியின் மதிப்பை பாதிக்கும் என்ற அச்சத்தில் இருந்தது. இருப்பினும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான தனது வரைபடங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக, பெரும்பாலும் கைவினை அட்டை அழைப்புகள் வடிவில், அவர் அரசியல் பிரசங்கத்தில் இருந்தபோது பார்வையாளர்களுக்கு பரிசுகளாக வழங்கினார். அவருடைய படைப்புகளில் சிலர் வான் கோ மற்றும் டெலாக்ராயிக்ஸ் போன்ற சமகால கலைஞர்களால் பாராட்டப்பட்டனர்; ஹியூகோ ஒரு எழுத்தாளராக இல்லாமல் ஒரு ஓவியராக ஆக முடிவெடுத்தால், அவர் அவர்களது நூற்றாண்டின் மிகச் சிற்ந்த கலைஞராக மற்ற எல்லா கலைஞர்களையும் மிஞ்சிவிடுவார் என்று கருத்து தெரிவித்தனர்.
தமிழில்
தொகுஇவரது லே மிஸரபிள் நாவலை சுத்தானந்த பாரதி ‘ஏழை படும் பாடு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
மறைவு
தொகு1870 ஆம் ஆண்டில் ஹியூகோ பாரிசுக்குத் திரும்பியபோது, அவரை நாட்டின் ஒரு தேசிய கதாநாயகனாக மக்கள் கொண்டாடினர். அவர் சர்வாதிகாரத்தை வழங்குவார் என்று மக்கள் நம்பினார் என்னென்றால் அந்த நேரத்தில் ஹியூகோ வைத்திருந்த குறிப்புகள் இப்படி காட்டுகின்றன. சர்வாதிகாரம் ஒரு குற்றம். இது நான் செய்யப்போகும் ஒரு குற்றமாகும் ஆனால் ஹியூகோ அவரே அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்திருந்தார்.[5] புகழ் பெற்றிருந்த போதிலும், 1872 ஆம் ஆண்டில் தேசிய சட்டமன்றத்திற்கு மறு தேர்தலுக்கு ஹியூகோ தனது போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
அவரது வாழ்நாள் முழுவதும் ஹியூகோ தடையற்ற மனிதநேய முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். 1879 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி அவரது கடைசி பொது கூட்டத்தின் உரையில் அவர் ஒரு மேலோட்டமான முறையில் தீர்க்கதரிசனம் உரைத்தார்: "இருபதாம் நூற்றாண்டில் யுத்தம் இறந்துவிடும், சேதமானது இறந்து போகும், வெறுப்பு இறந்துவிடும், எல்லைகள் இறந்துவிடும், சச்சரவுகள் இறந்துவிடும்; மனிதன் வாழ்வான்." என்றுரைத்தார்.[6]"
1885-ம் ஆண்டு, 83 ஆவது வயதில் காலமானார். இறக்கும் தறுவாயில் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்காக எழுதி வைத்தார்.இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.இவரது உடல் பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gjelten, Tom (2008). Bacardi and the Long Fight for Cuba. Penguin. p. 48.
- ↑ Robb, Graham (1997). Victor Hugo. London: Picador. p. 32.
- ↑ Petrucelli, Alan (2009). Morbid Curiosity: The Disturbing Demises of the Famous and Infamous. Penguin. p. 152.
- ↑ "Vincent van Gogh to Theo van Gogh. The Hague, between about Wednesday, 13 & about Monday, 18 December 1882". Van Gogh Museum. பார்க்கப்பட்ட நாள் 31 January 2012.
- ↑ Hugo Victor, Choses vues, 1870–1885, Gallimard, 1972, 2-07-036141-1, p. 257.
- ↑ Victor, Hugo (18 February 2014). "La Fin de Satan: Nouvelle édition augmentée". Arvensa editions. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017 – via Google Books.