பி. சீனிவாசராவ்

பி.சீனிவாசராவ் (B Srinivasa Rao, பிறப்பு: 1907, இறப்பு: செப்டம்பர் 30, 1961), தமிழக அரசியல்வாதி மற்றும் இந்திய பொதுவுடமை கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார். கர்நாடகாவில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் குடியேறி அரசியல் சங்கப் பணிகளைத் தொடர்ந்தார்.[1][2]

பி.சீனிவாசராவ்
பிறப்புபி.சீனிவாசராவ்
1907
கர்நாடகா
இறப்புசெப்டம்பர் 30, 1961 (அகவை 54)
தஞ்சாவூர்
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி, சுதந்திரபோராட்ட தியாகி
அறியப்படுவதுஇந்திய பொதுவுடமைக் இயக்க மூத்த தலைவர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை

தொகு

ஒன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னட பகுதியை சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1907 ஆம் ஆண்டு பிறந்தார்.[3] 1930-ம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அந்தச் சங்கத்தின் கிளைகளைத் தொடங்கி சங்க வளர்ச்சிக்கு உழைத்தார். இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். 1935இல் காங்கிரஸ் கட்சிக்குள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளையை முதலில் அமைத்து அதன் செயலாளராகவும் இருந்தார். அன்னியத் துணிகள் பகிஷ்காரம் நடந்த போது இவர் காவற்துறையினரால் தாக்கப்பட்டார். 1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவு கேட்டுக்கொண்டதன் பேரில், கீழத்தஞ்சை மாவட்டத்தில் பணியாற்ற வந்தார்.1943இல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கினார்[4]

நில உச்ச வரம்பு திருத்த சட்டமசோதாவுக்கு எதிரான போராட்டங்கள்

தொகு

1960 ஆம் ஆண்டு , அன்றைய காங்கிரஸ் அரசு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்திய நில உச்ச வரம்பு திருத்த சட்டமசோதா நிலப்பிரபுக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் , அதனை எதிர்த்து மசோதாவில் திருத்தம் கொண்டுவரக்கோரி பி. சீனிவாசராவ் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழகம் முழுவதும் மக்களிடம் கோரிக்கையை கொண்டு செல்ல மாபெரும் பாதயாத்திரையை மேற்கொண்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதைய மாநில தலைவராக இருந்த பி.சீனிவாசராவ் தலைமையில் கோவையிலிருந்து ஒரு அணி யும் அப்போதைய பொதுச்செயலாளர் தோழர் மணலி கந்தசாமி தலைமையில் மதுரையி லிருந்து ஒரு அணியுமாக இரண்டு பகுதிகளி லிருந்து சென்னை நோக்கி நடைப் பயண பிரச்சார இயக்கம் புறப்பட்டது. இரண்டு குழுக்களும் 600 மைல் தூரம் 37 நாட்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.[5]

இறப்பு

தொகு

பி. சீனிவாச ராவ் 1961ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தஞ்சாவூரில் காலமானார். அவருடன் அப்போது தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காத்தமுத்து, தஞ்சை ஏ.வி.ராமசாமி, கே.நல்லகண்ணு ஆகியோர் உடனிருந்தனர். அவரது உடல் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முல்லை ஆற்றங்கரையில் செப்டம்பர் 30 அன்று எரியூட்டப்பட்டது.

புகழ்

தொகு

தமிழக அரசு 14 நவம்பர் 2009 அன்று திருத்துறைப்பூண்டியில் அவருக்காக நினைவு மணிமண்டபத்தை அமைத்தது. அவருக்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 30 அன்று அரசு சார்பிலும் நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu. Bharathi Puthakalayam. 2011. pp. 417, 457–458. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80325-91-0.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Windmiller2011bsr என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Marxist. பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்
  4. "தமிழக தியாகிகள் -பி.சீனிவாச ராவ்". Archived from the original on 2015-04-11. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
  5. "மனித உரிமைப் போராளி தோழர் பி.சீனிவாசராவ்". தீக்கதிர்: p. 4. 30-09-2019. http://www.theekkathir.in/epaper#. 

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சீனிவாசராவ்&oldid=4114687" இலிருந்து மீள்விக்கப்பட்டது