காத்திருப்பேன் உனக்காக

காத்திருப்பேன் உனக்காக (Kaathirupaen Unakaaha) 1977-இல் இலங்கையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். வி. சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சிவராம், கீதாஞ்சலி, தர்மலிங்கம், சிறீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

காத்திருப்பேன் உனக்காக
இயக்கம்எஸ். வி. சந்திரன்
தயாரிப்புஎம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதைஎம். செல்வராஜ்
திரைக்கதைநவாலியூர் நா. செல்லத்துரை
இசைஆர். முத்துசாமி
நடிப்புஎம்.என்.சிவராம்
கீதாஞ்சலி
ரவி செல்வராஜ்
விஸ்வநாதராஜா
நவாலியூர் நா. செல்லத்துரை
ருக்மணி தேவி
எம். எம். ஏ. லத்தீப்
தர்மலிங்கம்
ஒளிப்பதிவுஎஸ். தேவேந்திரா
படத்தொகுப்புஎஸ். வி. சந்திரன்
விநியோகம்ஜெயேந்திரா மூவிஸ்
வெளியீடுசூன் 24, 1977
நாடுஇலங்கை
மொழிதமிழ்

மலையகத்தில், வத்தேகம எனும் இடத்தைச்சேர்ந்த மூன்று சகோதரர்கள் -எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜா என்பவர்கள் இத்திரைப்படத்தைத் தயாரித்தார்கள். எம். செல்வராஜாவின் கதைக்கு, திரைக்கதை, வசனம், பாடல்களை அவர்களது ஆசானான நவாலியூர் நா. செல்லத்துரை எழுதினார்.[1]

கண்டியில் வெளிவந்த "செய்தி" பத்திரிகையின் ஆசிரியரான நாகலிங்கத்தின் மகனான எம். என். சிவராம் (தற்போது தமிழ்நாட்டில் சென்னையில் வசிக்கிறார்) இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். அவரோடு கீதாஞ்சலி, ஸ்ரீதேவி, விஸ்வநாதராஜா, நவாலியூர் நா. செல்லத்துரை, செல்வராஜ், சிங்கள நடிகை ருக்மணி தேவி போன்ற பலர் நடித்தார்கள்.[1] பல சிங்களத் திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக இருந்த அனுபவத்துடன் எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தின் இயக்குனராகவும், படத்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். எஸ். தேவேந்திரா படப்பிடிப்பாளராகவும், ஆர். முத்துசாமி இசை அமைப்பாளராகவும் இணைந்து கொண்டார்கள். ஜோசப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள்.[1]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இது ஒரு முக்கோணக் காதல் கதை. ராஜி ராஜாவைக் காதலிக்கிறார், ராஜா சாந்தாவைக் காதலிக்கிறார். ராஜியின் அண்ணன் கண்ணனும், ராஜாவின் சகோதரி வனிதாவும் ஒருவரையொருவர் காதலிப்பதால் கதை மேலும் மாறுகிறது. ராஜா சாந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை அறிந்த ராஜியின் சகோதரர் கண்ணன், ராஜாவை ராஜியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் நோக்கோடு வனிதாவை பலாத்காரம் செய்கிறார். மீதிக்கதை ராஜா எடுக்கும் தேர்வை அவிழ்க்கிறது.

வரவேற்பு

தொகு
  • 1977 சூன் 24 அன்று வெளியான இத்திரைப்படம் யாழ்ப்பாணம் வின்சர் திரையரங்கில் 42 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இறுதிக்காட்சியில் சிவராமின் நடிப்பு உச்சமாகக் கருதப்பட்டது.
  • இத்திரைப்படத்தில் தாய் வேடத்தில் நடித்த பிரபல சிங்கள நடிகை ருக்மணி தேவிக்கு, பிரபல வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் பின்னணிக்குரல் கொடுத்தது மிகச் சிறப்பாக இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 தம்பிஐயா தேவதாஸ் (1 ஆகத்து 2020). "இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை". பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்திருப்பேன்_உனக்காக&oldid=3714462" இலிருந்து மீள்விக்கப்பட்டது