காந்தக்கோளம்
காந்தக்கோளம் (Magnetosphere) என்பது விண்வெளியில் உள்ள ஏதேனும் வான்பொருள் ஒன்றைச் சூழ்ந்து காணப்படும் வெற்றிடமான பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தில் ஏற்றம் பெற்ற பொருட்கள், குறித்த வான்பொருளினால் தன்னகத்தே ஈர்க்கப்பட்டு அவ்வான் பொருளின் காந்தப்புலத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.[1][2] வான்பொருள்களுக்கு அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வெளியிடப்படும் பிளாஸ்மாவினால், வான்பொருளின் காந்தப்புலக் கோடுகள் மின் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகலாம் (குறிப்பாக சூரியப்புயல் போன்றவற்றால்).[3][4] 1600 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆங்கிலேய வானியலாளரும் பௌதீகவியலாளருமான வில்லியம் கில்பேர்ட் புவியின் காந்தப்புலத்தினைக் கண்டறிந்ததில் இருந்து காந்தக்கோளம் பற்றிய ஆராய்ச்சிகளும், கல்விமுறையும் ஆரம்பமாகின.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Magnetospheres". NASA Science. NASA.
- ↑ Ratcliffe, John Ashworth (1972). An Introduction to the Ionosphere and Magnetosphere. CUP Archive. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521083416.
- ↑ "Ionosphere and magnetosphere". Encyclopedia Britannica. (2012). Encyclopedia Britannica, Inc..
- ↑ Van Allen, James Alfred (2004). Origins of Magnetospheric Physics. Iowa City, Iowa USA: University of Iowa Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780877459217. இணையக் கணினி நூலக மைய எண் 646887856.