காந்தி படித்துறை

காந்தி படித்துறை (Gandhi Ghat) பாட்னாவில் கங்கை நதியில் உள்ள முக்கிய படித்துறைகளில் ஒன்றாகும். இதற்கு இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவர் மகாத்மா காந்தியின் பெயரிடப்பட்டது. படித்துறை அதன் மாலை கங்கை ஆரத்திக்கு பிரபலமானது. [1] இது கங்கை நதியில் மகாத்மா காந்தியின் சாம்பலை மூழ்கடித்ததோடு தொடர்புடையது.

காந்தி படித்துறை
கங்கை நதியிலிருந்து காந்தி படித்துறையின் காட்சி
அமைவிடம்பாட்னா
ஆள்கூற்றுகள்25°37′18″N 85°10′20″E / 25.62167°N 85.17222°E / 25.62167; 85.17222
நிர்வகிக்கும் அமைப்புபாட்னா மாகராட்சி

இடம் தொகு

காந்தி படித்துறை கங்கைக் கரையில் அமைந்துள்ளது. இது பாட்னாவின் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பின்னால் அமைந்துள்ளது. மேலும் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது. [2]

கங்கை ஆரத்தி தொகு

காந்தி படித்துறையில் கங்கை ஆரத்தி 51 விளக்குகளுடன், பூசாரிகள் குழுவால், குங்குமப்பூ உடையணிந்து செய்யப்படுத்தப்படுகிறது. ஆரத்தி ஒரு சங்கு சப்தம் மூலம் தொடங்குகிறது. மேலும் விரிவான வடிவங்களில் தூபக் குச்சிகளின் இயக்கத்துடன் தொடர்கிறது. இருண்ட வானத்திற்கு எதிராக ஒரு பிரகாசமான சாயலை உருவாக்கும் பெரிய எரியும் விளக்குகளை வட்டமாக காண்பிக்கப்படுகிறது. இந்த சடங்கு 2011ஆம் ஆண்டில் வாரணாசி மற்றும் அரித்துவாரில் நடத்தப்படும் கங்கை ஆரத்தியின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.

சுற்றுலா தொகு

பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் காந்தி படித்துறையிலிருந்து எம்.வி.கங்கா விகார் என்ற மிதக்கும் உணவகத்தை இயக்குகிறது. இது சன்செட் கப்பல் மற்றும் லெஷர் கப்பல் / கார்ப்பரேட் கப்பல் போன்றவற்றையும் படித்துறையிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்குகிறது. [3] எம்.வி. கௌடில்யா என்ற மற்றொரு கப்பல் 2016 இல் சேர்க்கப்பட்டது. இது காந்தி படித்துறையிலிருந்து கங்கை நதியில் சுற்றுலா பயணங்களுக்கான பயணப் படகு ஆகும். இரண்டு கப்பல்களும் இயங்கும் இடத்தில் இருந்து காந்தி படித்துறையில் மிதக்கும் சிறு கப்பலை வைக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

காத்தாடி விழா தொகு

மகர சங்கராந்தியை முன்னிட்டு, சபல்பூர் தயரா தீவில், ஆற்றின் குறுக்கே காத்தாடி விழாவை மாநில சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்கிறது. திருவிழா முதன்முதலில் 2011இல் தொடங்கியது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_படித்துறை&oldid=3673789" இருந்து மீள்விக்கப்பட்டது