கானப்பாறை பாறை ஓவியங்கள்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியம்
கானப்பாறை பாறை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் நாகரசம்பட்டியை அடுத்து உள்ள நா. தட்டக்கல் சிற்றூருக்கு அருகில் கானப்பாறை என்ற இடத்தில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் ஆகும்.[1]
இங்கு உள்ள செங்குத்தான பாறை ஒன்றின் கிழக்கு முகமாக இந்த ஓவியத் தொகுப்பு காணப்படுகிறது. இவை வெள்ளை வண்ணத்தால் ஆன கோட்டோவியங்கள் ஆகும். இந்த தொகுப்பில் ஐந்து மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் உள்ள ஒரு மனித உருவம் கிடந்த நிலையில் இருக்க மற்ற நான்கு மனித உருவங்களும் கிடந்த நிலையில் உள்ள உருவத்தைச் சுற்றி அமர்ந்த, நின்ற கோலத்தில் காணப்படுகின்றன. இது சடங்கு தொடர்பான நிகழ்ச்சியைக் காட்டும் பெருங்கற்கால ஓவியம் என்று கருதப்படுகிறது.[1]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 172.
{{cite book}}
: Check date values in:|year=
(help)