கானலம்பெருந்துறை

கானலம்பெருந்துறை என்னும் சொல் மணல் பரப்பாகிய கானலை அடுத்திருந்த துறைமுகத்தைக் குறிக்கும். புகார், பந்தர் என்னும் துறைமுகப் பகுதியில் மன்னர் வாழ்ந்த இடம் ‘கானலம்பெருந்துறை’ எனப்பட்டது.

தித்தன் வெளியன் என்னும் சங்க காலச் சோழ மன்னன் புகார் நகரத்தை அடுத்திருந்த கானலம்பெருந்துறையில் இருந்துகொண்டு ஆட்சி புரிகையில் மரக்கலம் செலுத்திக் கடல்வாணிகம் செய்து பெருஞ்செல்வத்துடன் மீண்டிருக்கிறான். அகம் 152

பந்தர் துறைமுகத்தை அடுத்திருந்த கானலம்பெருந்துறையில் இருந்துகொண்டு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சி புரிந்துவந்தான். பதிற்றுப்பத்து 55-5

அடிக்குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானலம்பெருந்துறை&oldid=2023172" இலிருந்து மீள்விக்கப்பட்டது