கானாவில் திருமணம்
கிறித்தவத்தில் யோவான் நற்செய்தியின்படி கானாவில் நடந்த திருமணம் ஒன்றில் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றியது இயேசு நிகழ்த்திய முதல் புதுமையாகும்.[1][2] விவிலிய கூற்றின் படி இயேசுவும் அவரின் தாயும் சென்றிருந்த திருமணம் ஒன்றில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, மரியாவின் வேண்டுதலால் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றினார். கானா என்னும் ஊரின் அமைவிடத்தைக்குறித்து அறிஞர்களிடையே ஒத்த கருத்தில்லை.
நற்செய்தியில்
தொகுயோவான் நற்செய்தியில் மட்டுமே இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி:
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார். இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.
— யோவான் நற்செய்தி 2:1-11
மேற்கோள்கள்
தொகு- ↑ H. Van der Loos, 1965 The Miracles of Jesus, E.J. Brill Press, Netherlands page 599
- ↑ Dmitri Royster 1999 The miracles of Christ பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88141-193-0 page 71