கான்சுடன்சு எம். இராக்கோசி

கான்சுடன்சு (Constance) "கோன்னீ (Connie)" எம். இராக்கோசி (M. Rockosi)[1] சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல், வானியற்பியல் துறைக் கட்டில் பேராசிரியர் ஆவார்.[2] இவர் தன் முனைவர் பட்டத்தை 2001 இல் பெற்றார். இவர் சுலோவன் இலக்கவியல் வானளக்கைத் திட்டத்தில் தொடக்கத்தில் பயன்பட்ட தொலைநோக்கிக்கான ஒளிப்படக் கருவியை வடிவமைக்க உதவினார்.[1][3] இவர் சுலோவன் இலக்கவியல் வானளக்கைத் திட்டத்தின் மூன்றாம் பகுத்திக்குப் பொறுப்பாளராக இருந்தார். இத்திட்டம்பால்வெளி புரிதல், தேட்டம் சார்ந்த சுலோவன் விரிவாக்கத் திட்டமே ஆகும்.[4] இவர் இதே திட்ட இரண்டாம் பகுதியின் முதன்மை ஆய்வாளரும் ஆவார்.[5] இவர்து கவனம் பால்வழியின் ஆய்விலும் அது இன்றுள்ள நிலைக்குப் படிமலர்ந்ததையும் புரிந்துகொள்வதே ஆகும்.[6] பிற பால்வெளிகளின் செம்பெயர்ச்சிநிலைக் கட்ட உருவாக்கத்தை நம் பால்வெளியின் உருவாக்கத்தைப் பயில்வதன் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம் எனக் கருதுகிறார். இவரது ஆய்வின் நோகம் பால்வெளிகள் உருவாகும்போது நிகழும் அகந்திரள்வு விளைவுகளைத் தேடலும் புரிந்துகொள்ளலும் அதனால் பால்வெளிகளின் இயல்புகளையும் அவற்ரின் இன்றைய நிலவலையும் அறிதலாகும்.

கான்சுடன்சு எம். இராக்கோசி
கல்விஅறிவியல் பொறியியல் இளவல், மின்பொறியியல், பிரின்சுடன் பல்கலைக்கழகம்
முனைவர், வானியல், வானியற்பியல், சிகாகோ பல்கலைக்கழகம்
பணியகம்க்லைபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு

இவரது பழைய திட்டங்களில் இவர் விண்மீன் உருவாக்கத்தைப் புரிந்து கொள்ள, வான்வரைவிலும் விண்மீன்கள் ஆய்விலும் ஈடுபட்டார்..[7] இவரது ஆய்வு இவருக்கும் இவரது மாணவருக்கும் இன்றுள்ள சுருள்பால்வெளிகள் எப்படி தோன்றின என்பதையும் அவை எப்படி இன்றுள்ள நிலையை அடைந்தன என்பதையும் புரிந்துகொள்ள உதவி வருகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "UCO Lick Observatory". ucolick.org.
  2. "Chemical Abundance Trends in the Milky Way Disk: Implications on the Origin of the Galactic Thick Disk". eScholarship. UC Santa Cruz, Santa Cruz, California: UC Santa Cruz. June 2012. பார்க்கப்பட்ட நாள் October 31, 2015.
  3. Koppes, Steve (15 November 2007). "Sloan Digital Sky Survey: Universe of data changes face of astronomy". Chronicle (Chicago, Illinois: The University of Chicago) 27 (5). http://chronicle.uchicago.edu/071115/sdss.shtml. பார்த்த நாள்: October 31, 2015. 
  4. Janek, Vanessa (6 January 2015). "Hearing the Early Universe’s Scream: Sloan Survey Announces New Findings". Universe Today. http://www.universetoday.com/117896/a-new-universe-unleashed-sloan/. பார்த்த நாள்: 31 October 2015. 
  5. Moskowitz, Clara (10 January 2012). "Milky Way Galaxy's Past Revealed Through New Star Census". Space. http://www.space.com/14187-milky-disk-stars-galaxy-formation-segue.html. பார்த்த நாள்: 31 October 2015. 
  6. "UCSC Faculty Pages".
  7. "Dr. Rockosi's personal website".

வெளி இணைப்புகள்

தொகு