கான்சு ஆரோன்சன்
கான்சு ஆரோன்சன் (Hans Aronson; 28 நவம்பர் 1865- மார்ச் 1919) ஒரு செருமன் குழந்தை மருத்துவர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் திறனுக்கான ஆரோன்சன் பரிசு இவரது விருப்பப்படி நிறுவப்பட்டது. இது 1921 முதல் வழங்கப்படுகிறது. 1970 முதல், இந்தப் பரிசு பெர்லின் பேரவையினால் வழங்கப்படுகிறது.
ஆராய்ச்சி
தொகுஆரோன்சன் கோனிக்சுபெர்க்கில் பிறந்தார். இவர் கோனிக்சுபெர்க் மற்றும் பெர்லினில் மருத்துவம் பயின்றார். மேலும் ஒரு மாணவராக, இவர் பால் எர்லிச் உதவியாளராக ஆனார். ஆரோன்சன் முக்கியமாக நுண்ணுயிரியலிலும் தெளியவியலிலும் ஆர்வமுடையவராக இருந்தார். 1886ஆம் ஆண்டில் பால் எர்லிச்சை தனது முனைவர் பட்ட ஆலோசகராகக் கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1890 முதல் 1891 வரை பெர்லின்-வெட்டிங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் பணியாற்றினார். 1893ஆம் ஆண்டில், செரிங் ஏ. ஜியில் புதிதாக நிறுவப்பட்ட பாக்டீரியாலஜி துறையின் முதல் இயக்குநரானார். இங்கு திப்தீரியாவிற்கு எதிரான வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் வெற்றிகரமான தொண்டை அழற்சி நோய் நஞ்செதிரி எதிர் ஊனீரை இவர் உருவாக்கினார். இது பெரும்பாலும் எமில் அடால்ப் வான் பெர்ரிங்கின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பெர்ரிங் ஆய்விற்குப் போட்டியாக உள்ளது. 1902ஆம் ஆண்டில், இசுட்ரெப்டோகாக்கசுக்கு எதிராக எதிர் ஊனீருக்கான ஒரு புதிய உற்பத்தி முறையை இவர் உருவாக்கினார். 1909ஆம் ஆண்டில் செரிங்கை விட்டு வெளியேறிய தொண்டை அழற்சி, தொண்டை அடைப்பு நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் காசநோய் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.[1][2]
இறப்பு
தொகுஆரோன்சன் திரெசுடனில் இறந்தார். பெர்லினில் உள்ள யூத வெய்சென்சி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pagel, J. (ed.): Biographisches Lexikon hervorragender Ärzte des neunzehnten Jahrhunderts, Berlin, Wien 1901, pp. 1922–1923.
- ↑ Georg Henneberg: Die Geschichte der Stiftung für experimentelle Therapie – Aronson-Stiftung, Berlin, 1980
- ↑ Hans Aronson