முதன்மை பட்டியைத் திறக்கவும்

தெளியவியல்

தெளியவியல் (Serology) என்பது குருதித் தெளியம், மற்றும் ஏனைய உடல் திரவங்கள் பற்றிய அறிவியல் கல்வியாகும். நடைமுறையில் தெளியவியல் என்பது பொதுவாக நோய்களை அறுதியிடும் செயல்முறையில், குருதி தெளியத்திலிருந்து பிறபொருளெதிரிகளை அடையாளப்படுத்துவதையே குறிக்கின்றது[1]. இந்த பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்றுநோய்க்கு எதிராகவோ[2], அல்லது குருதி மாற்றீட்டில் ஏற்படும் ஒவ்வாமை நிலைகளில் பெறப்படும் வேறு சில வெளிப் புரதங்களுக்கு எதிராகவோ, அல்லது சில சமயம் தன்னுடல் தாக்குநோய் போன்ற நிலைகளில், தனது உடலில் உள்ள புரதத்திற்கு எதிராகவோ உருவாக்கப்படலாம்.

இந்த தெளியவியல் சோதனைகள், தொற்றுநோய் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படும்போதோ, அல்லது வாத நோய்கள் (rheumatic illness) இருக்கையிலோ, அல்லது தனியன்களின் குருதி வகையை அறியச் செய்யப்படும் சோதனைகள் போன்ற வேறு நிலைகளிலோ செய்யப்படும்[1]. முக்கியமாக பிறபொருளெதிரிகள் குறைவினால் ஏற்படக்கூடிய நோய் எதிர்ப்பாற்றல் முறைமை குறைபாடுகளை சோதித்து அறிய, இந்த தெளியவியல் சோதனைகள் உதவும். அந்நிலைகளில் பிறபொருளெதிரிக்கான சோதனை எதிர் முடிவைத் தரும்.

இந்த தெளியவியல் சோதனைகள் குருதி தெளியத்தில் மட்டுமன்றி, விந்துப் பாய்மம், உமிழ்நீர் போன்ற வேறு உடல் திரவங்களிலும் செய்யப்படும். சட்டம் சார்ந்த அறிவியலில் (Forensic science), ஒரு குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக இவ்வகை சோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும்.

தெளிவியலில் பலவேறு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளியவியல்&oldid=2275544" இருந்து மீள்விக்கப்பட்டது