விந்துப் பாய்மம்

விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திரவம்

விந்துப் பாய்மம் அல்லது விந்துப் பாய்மத் திரவம் என்பது கருக்கட்டலுக்குத் தேவையான விந்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு வெண்ணிறத் திரவமாகும். இதனை ஆங்கிலத்தில் Semen அல்லது Seminal fluid என்று அழைப்பர். இது விந்துப்பை, புராஸ்டேட் சுரப்பி, கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும். இப்பொருள் விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அவை நீந்திச் செல்லும் ஊடகமாகவும் விளங்கும். ஒருமுறை வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தில் 50 மில்லியன் விந்து உயிரணுக்கள் இருக்கலாம். புணர்ச்சியின் பொது ஆண் புணர் உறுப்பு விறைத்துப் பெரிதாகும். அவ்வுறுப்பின் அடிப்பகுதியிலிருந்து தோன்றும் தசை இயக்கங்களால் விந்துப் பாய்மம் விசையுடன் பெண்ணின் கலவிக் கால்வாயினுள் பீச்சப்படும்.[1][2][3]

A round clear dish viewed from above with a translucent white liquid pooled at the bottom
பெட்ரி தட்டில் உள்ள மனித விந்துப் பாய்மம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Julian Lombardi (6 December 2012). Comparative Vertebrate Reproduction. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4615-4937-6. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
  2. Armati, Patricia J.; Dickman, Chris R.; Hume, Ian D. (2006-08-17). Marsupials (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-45742-2.
  3. Dewsbury, Donald A. (1972). "Patterns of Copulatory Behavior in Male Mammals". The Quarterly Review of Biology 47 (1): 1–33. doi:10.1086/407097. பன்னாட்டுத் தர தொடர் எண்:0033-5770. பப்மெட்:4553708. https://archive.org/details/sim_quarterly-review-of-biology_1972-03_47_1/page/n13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்துப்_பாய்மம்&oldid=4174556" இலிருந்து மீள்விக்கப்பட்டது