குருதித் தெளியம்

குருதித் தெளியம் (Blood Serum) என்பது குருதி நீர்மத்தில் இருந்து நாரீனி அகற்றப்பட்ட பின்னர் பெறப்படும் நீர்மப் பொருளாகும். குருதியில் உள்ள குருதி உயிரணுக்கள், மற்றும் குருதி உறைதல் காரணியான நாரீனி தவிர்ந்த பகுதியே குருதித் தெளியம் ஆகும். குருதி உறைதலுக்கான புரதங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து புரதங்களையும் குருதித் தெளியம் கொண்டிருக்கும். இவற்றுள் இயக்குநீர்கள், பிறபொருளெதிரிகள், பிறபொருளெதிரியாக்கிகள் என்பன அடங்கும். குருதி தெளியமானது அயனிகள், வேறு மருந்துகள், நுண்ணுயிர்கள் போன்ற வெளிப் பதார்த்தங்களையும் கொண்டிருக்கும்.
நோய் ஆய்வுறுதி செய்யப்படுவதற்கு குருதி தெளியத்தில் செய்யப்படும் பல பரிசோதனைகள் உதவும். குருதியில் மையவிலக்கு விசை பயன்பாடு மூலம் குருதி உயிரணுக்கள் அகற்றப்படும்போது, குருதி நீர்மம் தனிப்படுத்தப்படும். அதனை குருதி உறைதலுக்கு உள்ளாக்கும்போது, நாரீனியும், வேறு குருதி உறைதல் காரணிகளும் அகற்றப்பட்டு, குருதித் தெளியம் பெறப்படும். சில சமயம் சில குருதி உறைதல் காரணிகள் குருதித் தெளியத்தில் எஞ்சியிருப்பதும் உண்டு.

குருதித் தெளியத்தைப் பரிசோதனைக் குழாயினுள் பிரித்தெடுத்தல்

மேற்கோள்கள்

தொகு
  • Martin, Elizabeth A., ed. (2007). Concise Medical Dictionary (7th ed.). ஆக்சுபோர்டு: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0192806971. பார்க்கப்பட்ட நாள் 8 September 2009.
  • Wang, Wendy; Srivastava, Sudhir (2002). "Serological Markers". Encyclopedia of Public Health 4. Ed. Breslow, Lester. நியூயார்க் நகரம்: Macmillan Reference USA. 1088–1090. அணுகப்பட்டது 8 September 2009. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதித்_தெளியம்&oldid=3800752" இலிருந்து மீள்விக்கப்பட்டது