குருதி உயிரணுக்கள்

குருதி உயிரணுக்கள் அல்லது குருதிக் கலங்கள் எனப்படுபவை குருதியில் சாதாரணமாக காணப்படும் எவ்வகையான உயிரணுக்களையும் குறிப்பதாகும். முலையூட்டிகளில் இது பொதுவாக மூன்று வகையாகக் காணப்படும். அவையாவன்:

நுண்ணோக்கியில் தெரியும் செங்குருதியணுக்களும், வெண்குருதியணுக்களும்

மொத்த குருதிக் கன அளவின் 45% இவ்வகையான கலங்களையும், மிகுதி குருதி நீர்மத்தையும் கொண்டிருக்கும்[1].

குருதிக் கல வகைகள்

தொகு
 
அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி மூலம் அவதானிக்கப்படும் சாதாரண குருதியின் தோற்றம். ஒழுங்கற்ற தோற்றமுடைய வெண்குருதியணுக்களுடன், செங்குருதியணுக்களும், தட்டுப் போன்ற அமைப்புடைய குருதிச் சிறுதட்டுக்களும் காணப்படுகின்றன.

செங்குருதியணு

தொகு

செங்குருதியணுக்களிலுள்ள ஈமோகுளோபின் எனப்படும் குருதிப் புரதமே முக்கியமாக ஆக்சிசனையும், பகுதியாக காபனீரொக்சைட்டையும் கடத்துகின்றது. இவ்வகைக் கலத்தின் வாழ்வுக்காலம் கிட்டத்தட்ட 120 நாட்களாகும்.

வெண்குருதியணு

தொகு

வெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவை முக்கியமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்.

குருதிச் சிறுதட்டுக்கள்

தொகு

குருதிச் சிறு தட்டுக்கள் குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும். இவற்றின் வாழ்வுக்காலம் கிட்டத்தட்ட 9 நாட்களாகும்.

குருதி அணுக்களின் தோற்றம்

தொகு
 

குருதி அணுக்கள் எலும்பு மச்சையில் இருந்து உருவாகின்றன. எலும்பு மச்சையில் காணப்படும் குருதி உருவாக்கும் குருத்தணுக்கள் எல்லா வகையான குருதி உயிரணுக்களும் தொடக்க உயிரணுவாக இருக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Maton, Anthea (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-981176-1. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_உயிரணுக்கள்&oldid=3812464" இலிருந்து மீள்விக்கப்பட்டது