கான்பர்சர்
கான்பர்சார் ஏரி (Khanpursar) என்பது இந்தியாவின் சம்மு-காசுமீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆழமற்ற, நீர் அல்லாத ஏரியாகும். இது ஸ்ரீநகர் நகரத்திலிருந்து வடமேற்கே 24 கி. மீ தொலைவில் ஜெலம் ஆற்றின் வலது கரையில் உள்ள கான்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற மனஸ்பால் ஏரி வடக்கில் 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1][2]
கான்பர்சர் ஏரி | |
---|---|
அமைவிடம் | கான்பூர் கிராமம், காந்தர்பல், சம்மு காசுமீர் |
ஆள்கூறுகள் | 34°12′22″N 74°40′33″E / 34.20611°N 74.67583°E |
முதன்மை வரத்து | காட்டோடை |
முதன்மை வெளியேற்றம் | ஜீலம் ஆறு |
அதிகபட்ச நீளம் | 0.28 mi (0.45 km) |
அதிகபட்ச அகலம் | .19 mi (0.31 km) |
மேற்பரப்பளவு | 16.8 ஏக்கர்கள் (0.0 sq mi; 0.1 km2) |
சராசரி ஆழம் | 13 அடி (4.0 m) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 5,184 அடி (1,580 m) |
மேற்கோள்கள் | [1][2] |
கான்பர்சார் ஏரிக்கு நீரானது நீரூற்றுகள் மற்றும் ஒரு சில தற்காலிகக் கால்வாய்கள் மூலம் வருகின்றது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர் ஜூலம் ஆற்றில் பாய்கிறது. இந்த ஏரி 400 மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முட்டை வடிவ ஏரியாகும். இதன் ஆழம் 4 மீட்டர் ஆகும். வில்லோ தோட்டங்கள் மற்றும் நெல் சாகுபடி ஆகியவை இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியில் காணப்படும் ஒரு பகுதியாகும். கான்பர்சர் ஏரியினைச் சுற்றி சில கிராமங்கள் சூழ்ந்துள்ளது. கான்பூர் கிராமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் பட்போரா மற்றும் குழாமா முறையே தெற்கு மற்றும் வடமேற்குப் பக்கங்களில் உள்ளன. இந்த ஏரி, மீனுக்கும் தாமரைத் தண்டிற்கும் முக்கிய ஆதாரமாகும்.[1][3][2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 M.A. Khan, Prof. (2000). Environment, Biodiversity, and Conservation. Aph Publishing Corporation. pp. 74–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176481645.
- ↑ 2.0 2.1 2.2 "PHYSICO-GEOGRAPHICAL AND MORPHOMETRIC FEATURES OF TWO SHALLOW HIMALAYAN LAKES". பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
- ↑ Ichthyologica Volume 2, Issues 1-2. International Society of Ichthyology and Hydrobiology. 1963. p. 105.