கான் யூனிசு

கான் யூனிசு (அரபு மொழி: خان يونس‎, translation: Caravansary [of] Jonah) என்பது காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தீனிய நகரமாகும். பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் அளித்துள்ள தகவலின்படி 2007 ஆம் ஆண்டில் 142,637 பேர்; 2010 ஆம் ஆண்டில் 202,000 பேர்; 2012 ஆம் ஆண்டில் 350,000 பேர் என்பதாக இந்நகரத்தின் மக்கட்தொகை இருந்தது.[1] நடுநிலக் கடலுக்கு கிழக்கே 4 கி.மீ (2.5 மைல்கள்) தொலைவில் அமைந்திருக்கும் இந்நகரில் பாலைவனத்தை ஒத்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 30°C வெப்பநிலையும், குளிர்காலத்தில் 10°C வெப்பநிலையும் இருக்கும். ஆண்டு மழையளவு 260 மில்லிமீட்டர் (10.2 அங்குலம்) ஆகும்.

கான் யூனிசு
நகரம்
அரபு transcription(s)
 • அரபுخان يونس
கான் யூனிசு is located in the Palestinian territories
கான் யூனிசு
கான் யூனிசு
Location of Khan Yunis within பலத்தீன் நாடு
ஆள்கூறுகள்: 31°20′40″N 34°18′11″E / 31.34444°N 34.30306°E / 31.34444; 34.30306
Palestine grid83/83
Stateபலத்தீன் நாடு
ஆளுநரகம்கான் யூனிசு
Founded1387
அரசு
 • வகைநகரம்
 • நகரத் தலைவர்முகமத் ஜவாத் அப்த் அல்-கலிக் அல்-ப்ரா Muhammad
பரப்பளவு
 • மொத்தம்54.56 km2 (21.07 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்1,42,637[1]
Name meaning"Caravansary [of] Jonah"
இணையதளம்www.khanyounis.mun.ps

கான் யூனிசு தொகுதி, பாலத்தீனிய சட்ட மேலவையில் 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் நடந்த பாலத்தீனிய சட்ட மேலவைக்கானத் தேர்தலில், ஹமாஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் 3 பேரும், ஃபத்தா இயக்கத்தின் உறுப்பினர்கள் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நகரம் தற்போது ஹமாஸ் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 2007 PCBS Census. பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் (PCBS). 2009. p. 63.

நூலடைவு தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khan Yunis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_யூனிசு&oldid=3849040" இலிருந்து மீள்விக்கப்பட்டது