காபி-இலை தேநீர்

காபி-இலை தேநீர் (Coffee-leaf tea) என்பது காபி செடியின் இலைகளிலிருந்து (காஃபியா ரோபசுடா அல்லது காஃபியா அரபிகா ) தயாரிக்கப்படும் ஒரு மூலிகை தேநீர் ஆகும். இந்த இலைகள், வறுத்த பிறகு,  தேயிலைக்கு ஒத்த வடிவத்தில் அரைத்து அல்லது நொறுக்கி, சூடான நீரில் காய்ச்சப்படுகிறது. இதன் விளைவாகக் கிடைக்கும் பானம் பசும் தேநீர் சுவையினை ஒத்ததாக இருக்கிறது. மேலும் இதில் வழக்கமான தேநீர் அல்லது காபியில் இருப்பதைவிடக் குறைந்த அளவில் காஃபின் உள்ளது.[1] பொதுவாகக் காபி இலைகள் பராகுவே தேயிலை (ஐலெக்சு பராகுவாரென்சிசு) இலைகள் மற்றும் தண்டுகளைப் போன்று காணப்படுகின்றன.[2] சுமத்ரா மற்றும் எத்தியோப்பியா போன்ற சில பிராந்தியங்களில், காபி செடியிலிருந்து இலைகள் மட்டுமே பறிக்கப்பட்டு பழங்கள் செடிகளிலே விடப்படுகின்றன.

எத்தியோப்பியாவில், காபி-இலை தேநீர் குட்டி என்று அழைக்கப்படுகிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபி-இலை_தேநீர்&oldid=3715352" இலிருந்து மீள்விக்கப்பட்டது