காபூலின் காதல் குற்றங்கள் (ஆவணப்படம்)

ஆப்கானிய ஆவணப்படம்

காபூலின் காதல் குற்றங்கள் (Love Crimes of Kabul) எனும் ஆவணப்படம் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆப்கானிஸ்தானின் பாதம் பாக் எனும் பெண்களுக்கான சிறைச்சாலையில் உள்ள சில குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் நேர்காணலோடு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. இவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி நீதி மன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆவணப்படம் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமியச் சட்டமுறையைப் புரிந்து கொள்ள உதவும்.

காபூலின் காதல் குற்றங்கள் (Love Crimes of Kabul)
இயக்கம்தனாஸ் இஷாகெய்ன்
தயாரிப்புதனாஸ் இஷாகெய்ன்
கதைஸாரா பெர்ன்ஸ்டீன்
இசைஃப்ளோரன்ஸியா டி கோன்ஸிலியோ
நடிப்புகரீமா, ஃபெரோஷ், அலீமா, ஜியா ஸான், ஸஃபீரா
ஒளிப்பதிவுகேத் பேட்டர்ஸன்
படத்தொகுப்புஜே ஃப்ரூண்ட்
வெளியீடுசூலை 11, 2011 (2011-07-11)
ஓட்டம்72 நிமிடங்கள்
மொழிடாரி
பஷ்தூ
ஆங்கிலம் (துணைத்தலைப்புகள்)

இந்த ஆவணப்படத்தின் முதல் காட்சியில், சிறைச்சாலைக் காவலர்,

"இவர்கள் நல்ல பெண்களாக இருந்திருந்தால், அவர்கள் இங்கே வந்திருக்க மாட்டார்கள்".[1]

என்கிறார். மேலும், இந்த ஆவணப்பட இயக்குனர் மிகவும் கடினமாக சூழ்நிலைகளுக்கிடையில் படம் பிடித்துள்ளார். முறையான அனுமதி இருந்தும் சிறைக்காவலர்கள் இவரை உள்ளே அனுமதிக்கவில்லை. நீதிபதிகளும் இவர்களது கோரிக்கையை நிராகரித்துள்ளார். இறுதியில் சிறை நிர்வாகம் பேட்டி எடுப்பதைக் கவுரவமாகக் கருதியதால் அனுமதித்தனர் என கூறுகிறார்.[2]

கதைக்களன்

தொகு
  • கரீமா திருமணத்திற்கு முன் ஃபெரோஷ் எனும் தன்னுடைய ஆண் நண்பருடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
  • அலீமா தனது குடும்பதினரின் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஜியா ஸான் எனும் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தாள். அலிமாவிற்கு 10 மாதங்களும், அடைக்கலம் கொடுத்த ஜியா ஸானுக்கு 18 மாதங்களும் தண்டனை.
  • ஸஃபீரா அண்டையருடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Love Crimes of Kabul
  2. "பேட்டி".

வெளி இணைப்புகள்

தொகு