காப்பியாற்றுக் காப்பியனார்

காப்பியாற்றுக் காப்பியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.காப்பியாறு என்பது ஓர் ஊர். அது கபினி ஆற்றங்கரையில் இருந்தது.இவர் சேர வேந்தன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார். இவன் மீது பாடப்பட்ட அந்தப் பாடல்கள் பதிற்றுப்பத்து நாலாம்பத்தாக அமைந்துள்ளன.