காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம்

புனித பரலோக மாதா திருத்தலம் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காம நாயக்கன்பட்டி புதுமை நகரில் உள்ள இந்தியாவின் புகழ் பெற்ற கத்தோலிக்க பேராலயம் ஆகும்.[1]

பரலோக மாதா

இத்திருத்தலம் கி.பி 1684-இல் பங்குத்தந்தை சான் டி பிரிட்டோவால் சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1850-இல் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆலயம் புனித பரலோக மாதாவின் பெயரால் கட்டப்பட்டதாகும்.

வீரமாமுனிவர் வருகை

தொகு

இத்தாலி நாட்டுக் கவிஞரும், தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவர் இத் திருத்தலத்தில் பங்குத்ததந்தையாக l712 -1715 வரை பணியாற்றினார்.[2] இவரின் இயற் பெயர் கான்ச்டான்டின் சோசப் பெக்சின் என்பதாகும். இவருக்கு தைரியநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்திய கலாச்சாரப்படி இத்தலத்தில் விழாக் காலத்தில் பரலோகமாதா தேர் பவனி வருவதை இவர் அறிமுகப்படுத்தினார். வீரமாமுனிவர் காலத்தில் இந்த தலத்தில் இரண்டு மரத்தால் ஆன தேர்கள் செய்யப்பட்டன.

புனித பரலோக மாதா திருவிழா

தொகு

புனித பரலோக மாதா ஆலயத்தின் பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பத்து நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாத விழா, பெரிய திருவிழா, மாதா திருவிழா, காமநாயக்கன்பட்டி திருவிழா, பரலோக தாய் திருவிழா, பரலோக மாதா திருவிழா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.‌ [2]

திருவிழாவின் போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறித்தவ கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளை பெற்றுச் செல்வர். விழாவின் போது மக்கள் கும்பிடு சேவை என்னும் வேண்டுதலை நிறைவேற்றுவர். இதன் மூலம் தங்கள் வேண்டுதல் முழுமையடைவதாக மக்கள் நம்புகின்றனர்.

நேர்த்திக்கடன்கள்

தொகு
  • அசனம் கொடுத்தல்
  • காது குத்துதல்,
  • தீர்த்தம்,
  • புதுமை எண்ணெய்,
  • மந்திரித்தல்,
  • மெழுகுவர்த்தி பற்ற வைத்தல்,
  • மொட்டை போடுதல்,
  • விற்று வாங்குதல்,
  • வெள்ளி, தங்கப் பொருள்கள் நேர்ச்சை,

ஆதாரங்கள்

தொகு
  1. மலர், மாலை (16 ஆக., 2022). "காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தில் தேர்பவனி". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 "Paraloga Matha shrine feast | வீரமாமுனிவர் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம்". Dinamani.