காமராஜர் நீர் தேக்கம்
காமராசர் நீர் தேக்கம் (Kamarajar Dam Reservoir) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ளது.[1]திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு பகுதியில் மழை பெய்தால் மழைநீர் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவதற்கு மலையில் நீர்வரத்து வாய்க்கால்கள் அமைந்துள்ளன.[2] 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள காமராசர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 24 அடியாகும். திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செம்பட்டியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் ஆத்தூர் கிராமத்தில் இந்நீர்த்தேக்கம் அமைத்துள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "திண்டுக்கல் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கம் கிடுகிடு உயர்வு". தினகரன் இம் மூலத்தில் இருந்து 25 செப்டம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220925033712/https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=448662. பார்த்த நாள்: 9 September 2022.
- ↑ "மழையால் நிரம்பிய ஆத்தூர் நீர் தேக்கம்; 3வது முறையாக மறுகால் பாய்கிறது". Dinamalar. 2022-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ "ஆத்தூர் நீர் தேக்கத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.