காமரூப்பின் நாட்டுப்புற பாடல்கள்
காமரூப்பின் நாட்டுப்புற பாடல்கள் என்பது அசாமிய காம்ரூப் மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் நாட்டுப்புற இசையின் பிரபலமான வடிவமாகும். [1] இந்த பாடல்கள் அனைத்தும் பண்டைய காமரூப் இன மக்களிடம் இருந்து வழிவழியாக வாய்மொழியாக பரப்பப்பட்டவையாகும். [2] காமரூபியின் இந்த நாட்டுப்புற பாடல்களின் மொழியானது ஆரம்பகால அசாமிய மொழிகள், காம்ரூபி பேச்சுவழக்குகள் மற்றும் தற்போதைய அசாமிய மொழிகள் உட்பட அசாமியரின் வெவ்வேறு பேச்சுவழக்குகள் மற்றும் பண்டைய வடிவங்களைக் கொண்டுள்ளது.
வரலாறு
தொகுஇந்தப் பாடல்கள் பழங்காலத்திலிருந்தே காம்ரூப் பகுதி மக்களால் பரம்பரை பரம்பரைகளாக பாடப்பட்டு வருகின்றன. திருமணப் பாடல்கள் (பியார் கீத்), கெளர் (படகுப் போட்டி பாடல்கள்) கீத், மஹா கெடா (கொசுவை விரட்டுதல்) பாடல்கள், குழந்தை விளையாட்டு பாடல்கள், அறுவடை திருவிழா பாடல்கள், மீன்பிடி பாடல்கள் மற்றும் தாலாட்டு போன்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை இணைக்கும் பாடல்களின் வடிவங்களும் பிரபலமாக உள்ளன. இலக்கியம் மற்றும் இசை ஆகிய இரண்டிலும் மிக உயர்ந்த நுட்பமான மற்றும் நேர்த்தியான வைஷ்ணவப் பாடல்களும் தாழ்மையான டோலாரா மற்றும் டாகர் (அல்லது கஞ்சரி) போன்ற காமரூப நாட்டுப்புற பாடல்களும் என இரண்டு வகைகளிலும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. பரவலாக இவை பாடப்பட்டாலும் அவை மிகுந்த இசை நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றன. [3] இது இசை முறைகளின் செழுமைக்காக அறியப்படுகிறது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bīrendranātha Datta (1999), Folkloric Foragings in India's North-East, p.31. p.p.240
- ↑ "Kamrupi Lokgeet". mapsofindia.com. Archived from the original on 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-07-24.
- ↑ Dhaneswar Kalita (1991), Traditional performances of South Kamrup, p.57, p.p82, Gian Pub. House
- ↑ Sangeet Natak Akademi (1974), Sangeet natak: Issues 31-34