கொமோதினி (Komotini கிரேக்கம்: Κομοτηνή‎, துருக்கியம்: Gümülcine, பல்கேரிய: Комотини) கிழக்கு மாசிதோனியா மற்றும் வடகிழக்கு கிரேக்கத்தின் திரேசு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது ரோதோப்பின் தலைநகரம். இந்த நகரம் 1973 இல் நிறுவப்பட்ட தெமோக்ரிடசு பல்கலைக்கழகத்தின் தாயகமாகும். கொமோதினியில் கணிசமான அளவு துருக்கிய மொழி பேசும் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.

சமவெளியின் வடக்குப் பகுதியில் அதே பெயரில் கட்டப்பட்ட கொமோதினி, வடகிழக்கு கிரேக்கத்தின் முக்கிய நிர்வாக, நிதி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகும், மேலும் அப்பகுதியின் முக்கிய விவசாய மையமாக உள்ளது. [1]

மக்கள் தொகையியல்

தொகு

இந்த நகரத்தில் உள்ளூர் கிரேக்கர்கள், அனத்தோலியா மற்றும் கிழக்கு திரேஸில் இருந்து வந்த கிரேக்க அகதிகள், துருக்கியர்கள், போமாக், கிரேக்க மற்றும் உரோமானியர்கள் வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஆர்மீனிய இனப்படுகொலையில் இருந்து தப்பிய அகதிகளின் வழித்தோன்றல்கள் மற்றும் வடகிழக்கு அனதோலியா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் (குறிப்பாக சியார்சியா, ஆர்மீனியா, உருசியா மற்றும் கசக்ககஸ்தான் ) பகுதிகளைச் சேர்ந்த கிரேக்கர்கள் உள்ளனர்.

தற்போதைய கொமோதினி

தொகு

கொமோதினி, தற்போது, ஒரு செழிப்பான வணிக மற்றும் நிர்வாக மையமாக உள்ளது. இது நகரத்தின் வரலாற்று மையம் பெரும்பாலான வணிகம் மற்றும் சேவைகளுடன் மையப்படுத்தப்பட்டுள்ளது.

 
ஒரு மைய வீதியின் காட்சி.
 
ப்ரிஃபெக்சர் கட்டிடத்துடன் கூடிய கொமோதினியின் மையம்.

சான்றுகள்

தொகு
  1. "Visit Greece - ΚΟΜΟΤΗΝΗ". www.visitgreece.gr.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமோதினி&oldid=3627244" இலிருந்து மீள்விக்கப்பட்டது