காம்பிளி ஆறு
(காம்பிளி நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காம்பிலி ஆறு என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளே அனுப்பட்டி என்ற இடத்தில் துவங்கி ஈரோடு மாவட்டம் மயிலரங்கம் எனும் இடத்தில் அமராவதி ஆற்றோடு கலக்கும் ஒரு காட்டாறாகும். இதன் நீளம் சுமார் 70 கிமீ. பெரு மழைக்காலங்களில் நதி போன்றும் மற்ற நேரங்களில் வறண்ட ஓடையாகவும் காட்சி தரும். இது செல்லும் வழியில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. முழுமையாக மீட்டெடுக்கவும் பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆற்றின் குறுக்கே திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவிலை அடுத்த உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 6,043 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.