காயகல்ப் விருது

காயகல்ப் விருது (Kayakalp Award) என்பது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் ஆண்டுதோறும் தூய்மையான சிறந்த மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் விருதாகும். இது தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்பாடுத்தப்படுகிறது. தொடக்கத்தில் 2015 இல் மாவட்ட மருத்துவமனைகளுக்கு மட்டும் விருதுகள் அளிக்கப்பட்டன, பின்னர் 2016 இல் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டன, பின்னர் 2017 முதல் அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டன.[1] அங்கீகாரமும், ஊக்குவிப்பையும் அளித்து இந்த விருதின் மூலம் தூய்மையையும் சுகாதாரத்தையும் வலியுறுத்தி தொற்றுக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த முடிகிறது.[2]

காயகல்ப் விருது
விருது வழங்குவதற்கான காரணம்இந்தியாவிலுள்ள சுகாதர மையங்கள்
இதை வழங்குவோர்இந்திய அரசு
முதலில் வழங்கப்பட்டது2015
கடைசியாக வழங்கப்பட்டது2022

விருது வகைகள் தொகு

பல்வேறு மதிப்பிடலுக்கும் ஆய்வுகளுக்கும் பின்னர் கீழ்க்காணும் வகைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன:

  • சிறந்த மாவட்ட மருத்துவமனை
மாநிலம் மாவட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை விருதுகளின் எண்ணிக்கை விருதுப் பணம்
பிரிவு A 10 – 25 1 விருது ரூ. 50.00 லட்சம்
பிரிவு B 26 – 50 2 விருதுகள் ரூ. 50.00 லட்சம் – முதலிடம்,
ரூ. 20.00 லட்சம் - இரண்டாமிடம்
பிரிவு C > 50 3 விருதுகள் ரூ. 50.00 லட்சம் - முதலிடம்,
ரூ. 20.00 லட்சம் – இரண்டாமிடம்,
ரூ. 10.00 லட்சம் - மூன்றாமிடம்
  • சிறந்த சமுதாய நல மையம்/வட்டார மருத்துவமனை
மாநிலம் மாவட்ட எண்ணிக்கை விருதுகள் எண்ணிக்கை
பெரிய மாநிலம் >10 மாவட்டம் 2 விருது
சிறிய மாநிலம் 10 மாவட்டம் 1 விருது
  • ஒவ்வொரு மாவட்டத்தில் சிறந்த ஒரு ஆரம்பச் சுகாதார மையம்

தகுதிக்கான வரையறைகள் தொகு

இந்த விருதினைப் பெற மருத்துவமனைகள் ஆண்டுதோறும் விண்ணப்பிப்பது உண்டு. கீழ்க் காணும் வரையறைகளின் படி இவ்விருதிற்கான சுகாதார மையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

  1. மருத்துவமனை/மையத்தின் பராமரிப்பு
  2. தூய்மை மற்றும் சுகாதாரம்
  3. கழிவு மேலாண்மை
  4. தொற்றுக் கட்டுப்பாடு
  5. உதவி சேவைகள்
  6. சுகாதார விழிப்புணர்வு

தமிழ்நாட்டின் சிறந்த மாவட்ட விருதுகள் தொகு

  1. 2018-19 பெண்ணாகரம் மற்றும் உசிலம்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விருது பெற்றன.[3]
  2. 2019-20 கோவில்பட்டி மற்றும் மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விருது பெற்றன.[4]
  3. 2020-21 கோவில்பட்டி மற்றும் உசிலம்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விருது பெற்றன.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "KAYAKALP AND SWACHH SWASTH SARVATRA". NHSRC India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
  2. Revised Kayakalp Guidelines (PDF). Ministry of Health and Family Welfare. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
  3. "விருதுப் பட்டியல் 2018-19". nhsrcindia. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
  4. "விருதுப் பட்டியல் 2019-20". nhsrc india. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
  5. "விருதுப் பட்டியல் 2020-21" (PDF). nhsrcindia. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயகல்ப்_விருது&oldid=3801385" இலிருந்து மீள்விக்கப்பட்டது