காய்ந்த இலை கும்பிடுபூச்சி

பல பூச்சிகளுக்கான பொதுப்பெயர்

காய்ந்த இலை கும்பிடுபூச்சி (Dead leaf mantis) என்பது இறந்த இலைகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கும்பிடுபூச்சிகளுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர் ஆகும். கவர்ச்சியான செல்லப்பிராணிகளாக பிரபலமாக இருப்பதால், தெரோபிளாட்டிசு பேரினத்தில் உள்ள சிற்றினங்களைக் குறிக்க இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தெ. டெசிக்காட்டா (இராட்சத காய்ந்த இலை கும்பிடுபூச்சி), தெ.லோபாடா (தென்கிழக்கு ஆசிய காய்ந்த இலை கும்பிடுபூச்சி) மற்றும் தெ. பிலிப்பீனிகா (பிலிப்பீன்சு காய்ந்த இலை கும்பிடுபூச்சி) இவ்வகையினைச் சார்ந்தவை.[1][2] பிற பூச்சிகளாக அகாந்தோப்சு பால்காடேரியா (தென் அமெரிக்க காய்ந்த இலை கும்பிடுபூச்சி),[3] அ. பால்காட்டா (தென் அமெரிக்க காய்ந்த இலை கும்பிடுபூச்சி) உள்ளன. பிலோக்ரானியா பாரடாக்சா (பேய் கும்பிடுபூச்சி) மிகவும் பொதுவானது.[4][5][6][7]

சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் சிறைப்பிடிக்கப்பட்ட இறந்த இலை மாண்டிஸ்.
2007-ல் பிரிசுடல் மிருகக்காட்சிசாலையில் முதிர்வடைந்த பெண் தெரோபிளாடிசு டெசிக்காட்டா

மேலும் பார்க்கவும்

தொகு

 * புல் கும்பிடுபூச்சி

மேற்கோள்கள்

தொகு
  1. Dead Leaf Praying Mantis
  2. Web of Life
  3. Praying Mantises, AKA Mantids (Order Dictyoptera) பரணிடப்பட்டது சூலை 21, 2008 at the வந்தவழி இயந்திரம்
  4. pawsforthoughtpetcentres.co.uk பரணிடப்பட்டது 2008-06-08 at the வந்தவழி இயந்திரம்
  5. PhasmidsinCyberspace.com 2005 பரணிடப்பட்டது சூன் 8, 2008 at the வந்தவழி இயந்திரம்
  6. PrayingMantid.co.uk பரணிடப்பட்டது நவம்பர் 21, 2008 at the வந்தவழி இயந்திரம்
  7. mantispets.com 2012