காரணப் பெயர்

ஏதேனும் ஒரு காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும்.

எ.கா.

காரணப்பெயரை காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர் எனப் பகுப்பர். விலங்கு-பறவை-அணி போன்றவை காரணப் பொதுப் பெயருகுச் சான்றாகும்.(பறவை - பறக்கின்ற காரணத்தால் எல்லா பறவைகளுக்கும் அமைந்ததால் காரணப் பொதுப் பெயர் என அழைக்கப்படும்) வளை-குண்டலம் போன்றைவ காரணச் சிறப்புப் பெயருக்குச் சான்றாகும்.(வளை - வளைந்த எல்லா பொருள்களையும் குறிக்காமல் வளையல் என்னும் அணிகலனைக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயருக்குச் சான்றாகும்.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணப்_பெயர்&oldid=2593158" இருந்து மீள்விக்கப்பட்டது