காரன் ஜே. மீச்

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 3 [1]
சிறுகோள் மையத்தின் 2016 ஆகத்து அறிவிப்புப்படி கண்டுபிடித்துள்ளார்.

காரன் ஜே. மீச் (Karen J. Meech) (பிறப்பு: 1959) அவாய்ப் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் பணிபுரியும் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[2]


இவர் கோள் வானியலில் சிறப்பு புலமை பெற்றவர். குறிப்பாக, நெடுந்தொலைவு வால்வெள்ளிகளுக்கும் தொடக்க கால சூரியக் குடும்பத்துக்கும் உள்ள உறவை ஆய்வதில் வல்லுனர். இவர் பயில்நிலை, தொழில்முறை வானியல் ஆய்வு ஒருங்கிணைப்பிலும் அறிவியல் ஆசிரியர் கல்வியிலும் ஆர்வமோடு செயல்படுகிறார். இவர் கோள்களை நோக்கி எனும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்-மாணவர் பரப்புரை நிகழ்ச்சியைப் பசிபிக் தீவுகளில் உருவாக்கி நடத்தி வருகிறார். இவர் 1987 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கோள் அறிவியலில் தன் முனைவர் பட்ட்த்திப் பெற்றார். இவர் தனது இளம் அறிவியல் பட்டத்தை அவுசுட்டனில் உள்ள இரைசுப் பலகலைக்கழகத்தில் 1981 இல் பெற்றார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, எச். சி. உரே பரிசு (1994) ஆகியன உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் ஆழ்மொத்தல் திட்ட விண்கல ஆய்வில் இணை ஆய்வாளராக உள்ளார். இவர் நடப்புக் கண்டுபிடிப்புத் திட்டங்களாகிய எபொக்சி ( EPOXI), விண்மீந்தூசு நெக்சுட்டு (Stardust-NExT) ஆகியவற்றிலும் இணை ஆய்வாளராக உள்ளார்ரிம்மூன்றுத் திட்டங்களிலும் இவர் தரை, விண்வெளி நோக்கீட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்ரிவர் அவாய்ப் பல்கலைக்கழகப் பொறுப்புத் தலைவராகவும் உள்ளார்.

நாசா வான் உயிரியல் நிறுவன முன்னணிக் குழு அதன் ஆய்வில் "நீரமைந்த வாழ்தகவு உலகங்களில்" கவனத்தினைக் குவித்து வருகிறது. இவர் இப்போது பன்னட்டு வானியல் ஒன்றிய மூன்றாம் கோள் அமைப்பு அறிவியல் பிரிவின் தலைவராக உள்ளார்.

சுசெல்தே புசு 1981 இல் சைடிங் சுப்பிரிங் வான்காணகத்தில் கண்டுபிடித்த முதன்மைப் பட்டை சிறுகோள் 4367 மீச் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.
  2. "Faculty list". Institute for Astronomy. பார்க்கப்பட்ட நாள் 10 January 2011.
  3. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (4367) Meech. Springer Berlin Heidelberg. p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரன்_ஜே._மீச்&oldid=3965108" இலிருந்து மீள்விக்கப்பட்டது