காரமடை நஞ்சுண்டேசுவரர் கோயில்

தேவம்பாடி வலசு அமணீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னர் இவ்வூர் தெய்வம்பாடி வலசு என்றழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். [1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக நஞ்சுண்டேசுவரர் உள்ளார். இறைவி லோக நாயகி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக தெப்பம் உள்ளது. மகாசிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]

அமைப்பு தொகு

மூலவர் திருமேனி பட்டையாக, செந்நிறத்தில் காணப்படுகிறது. சன்னதிக்குள் மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் காணப்படுகிறது. இவ்வகையில் இரண்டு ஆவுடையாருடன் காணப்படுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. சிவன் சன்னதியையொட்டி கோஷ்டத்தில் எட்டு யானைகள் விமானத்தைத் தாங்கியபடி காணப்படுகின்றன. ஒரு யானை சிற்பத்திற்குக் கீழ் பிரம்மாவும், மற்றொரு யானை சிற்பத்திற்குக் கீழ் லட்சுமி நாராயணரும் உள்ளனர். விநாயகர், ஆறுமுகவேலர், சண்டிகேசுவரர் ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் உள்ளன. தல விநாயகர் செண்பக விநாயகர் ஆவார். மூலவர் கோஷ்டத்தின் அருகே பாதாள விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் பிரதோஷ மூர்த்தி, சிவ துர்க்கை ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு