காரெட் ஹெட்லண்டின்

காரெட் ஜான் ஹெட்லண்டின் (பிறப்பு: செப்டம்பர் 3, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் விளம்பர நடிகர்(மாடல்). இவர் ஃபோர் பிரதர்ஸ், எராகன், ட்ராய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

காரெட் ஹெட்லண்டின்
பிறப்புகாரெட் ஜான் ஹெட்லண்டின்
செப்டம்பர் 3, 1984 (1984 -09-03) (அகவை 40)
ரோஸியு, மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், விளம்பர நடிகர்(மாடல்), பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்சமயம்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஹெட்லண்டின் செப்டம்பர் 3, 1984ஆம் ஆண்டு ரோஸியு, மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார். இவருக்கு நதானியேல் என்ற ஒரு மூத்த சகோதரரும் மற்றும் அமண்டா என்ற மூத்த சகோதரியும் உண்டு.

தொழில்

தொகு

இவர் 2004ஆம் ஆண்டு ட்ராய் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஃபோர் பிரதர்ஸ், எராகன், ஜார்ஜியா ரூல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2010ஆம் ஆண்டு ட்ரான்: லெகசி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக முய் திரைப்பட விழா ரைசிங் ஸ்டார், என்ற விருது வென்றார். இவர் 2014ஆம் ஆண்டு நடித்த மொஜாவே என்ற திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. தற்பொழுது இவர் பான் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2012ஆம் ஆண்டு ஒன் த ரோட் என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை கிர்ஸ்டென் டன்ஸ்ட் வுடன் டேட்டிங் சென்றார்.

 
ஹெட்லண்டின் 2012ம் ஆண்டு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா

திரைப்படங்கள்

தொகு

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

  • 2004: ட்ராய்
  • 2005: ஃபோர் பிரதர்ஸ்
  • 2006: எராகன்
  • 2007: ஜார்ஜியா ரூல்
  • 2010: ட்ரான்: லெகசி
  • 2014: மொஜாவே
  • 2015: பான்

சின்னத்திரை

தொகு
  • 2011: வென் I வாஸ் 17

வீடியோ விளையாட்டு

தொகு
  • 2006: எராகன்

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garrett Hedlund
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரெட்_ஹெட்லண்டின்&oldid=3348481" இலிருந்து மீள்விக்கப்பட்டது