காரோணம்
காரோணம் என்ற சொல்லைக் கொண்டு பல கோயில்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன.
பெயர்க்காரணம்
தொகுபாசுபத சைவ குருவான லகுலீசரால் இரண்டாம் நூற்றாண்டில் பாசுபத சைவ மடம் முதல் முதலாக குஜராத் மாநிலத்தில் காரோணம் என்னும் ஊரில் நிறுவப்பட்டது. இவ்வூர் இன்றும் பரோடா அருகில் கார்வான் என்ற பெயரில் உள்ளது. [1]
பொருள்
தொகுவடமொழிக் கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் கூறப்படும் காயாரோஹனம், காயாவரோஹனம், காயாவிரோஹனம் என்பதன் சுருக்கமே காரோணம் என்பதாகும். காய ஆரோஹனம் என்றால் (பக்தன்) உடலுடன் மேலே (வானத்திற்கு) செல்வது என்றும், காயாவரோஹனம் என்றால் பக்தனுக்காக இறைவன் (மனித உருவில்) இறங்கி வருகிறான் (அவதாரம்) செல்வது என்றும், காயாவிரோஹனம் என்றால் மீண்டும் பிறவியில்லை என்றும் கூறப்படுகிறது.[1]
தமிழகத்தில் காரோணங்கள்
தொகுகாரோணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் கச்சிக்காரோணம், நாகைக்காரோணம், குடந்தைக்காரோணம் என்று மூன்று கோயில்கள் இருந்தன. இதில் முதலாவது மறைந்துவிட்டது. மற்ற இரண்டும் உள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் திருநாகைக்காரோணம் ஆகும். கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையின் வடகரையில் உள்ள காசி விசுவநாதர் கோயில் திருக்குடந்தைக் காரோணம் எனப்படும். இக்கோயில்களுக்குப் பதிகங்கள் அருளிய திருஞானசம்பந்தர், இப்பதிகங்களைப் பாடுவோர் கரையா உடலோடு வானடைவர் (காய ஆரோஹனம்) என்றும், கருவார் இடும்பைப் பிறப்பு அறுப்பர் (காய அவிரோஹனம்) என்றும் கூறுகிறார். [1]
மேற்கோள்கள்
தொகு<references>