கார்த்திகா விஜயராகவன்

இந்திய-ஜெர்மன் துடுப்பாட்ட வீராங்கனை

கார்த்திகா விஜயராகவன் (Karthika Vijayaraghavan)(பிறப்பு: ஏப்ரல் 18,1988) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜெர்மனி மகளிர் தேசியத் துடுப்பாட்ட அணியின் இலக்குக் கவனிப்பாளர்-மட்டையாளராக விளையாடுகிறார்.

கார்த்திகா விஜயராகவன்
Karthika Vijayaraghavan
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு18 ஏப்ரல் 1988 (1988-04-18) (அகவை 36)
ஆம்பூர், தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை ஆட்டக்காரர்
பங்குஇலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 10)26 சூன் 2019 எ. இசுக்கொட்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் இருபது20
ஆட்டங்கள் 43
ஓட்டங்கள் 152
மட்டையாட்ட சராசரி 9.50
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 36*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/10
மூலம்: Cricinfo, 7 அக்டோபர் 2024

இளமை வாழ்க்கை.

தொகு

கார்த்திகா இந்தியாவின் தமிழ்நாட்டின் ஆம்பூரில் பிறந்தார்.[1] குழந்தையாக இருந்தபோதே துடுப்பாட்டத்தில் மிகுந்த கொண்டிருந்தார். மேலும், தெருவோரத்தில் நடக்கும் விளையாட்டில் பங்கேற்றார். அதே சமயம் துடுப்பாட்டம் என்பது ஆண்களுக்கான விளையாட்டு என்ற கருத்து இருந்ததால், இவரது பெற்றோர் இவரை கூடைப்பந்தாட்டம் விளையாட ஊக்குவித்தனர். பெரியவரான போதிலும் 5 அடி 2 அங்குலம் மட்டுமே உயரமாக இருந்த போதிலும், கார்த்திகா தனது நான்காம் வகுப்பிலிருந்தே 14 ஆண்டுகள் கூடைப்பந்தாட்டம் விளையடினார்.[2][3][4]

ஒரு கூடைப்பந்து வீரராக, பெங்களூரு, இராட்டிரிய வித்யாலயா பொறியியல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்த கார்த்திகா, அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். மேலும் இவருக்கு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கோப்பை வழங்கப்பட்டது. கோடைகாலத்தில் துடுப்பாட்டமும் விளையாடியும் வருகிறார். மேலும் பெருநிறுவனஙகளுக்கிடையே நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.[5]

2014 ஆம் ஆண்டில், இவர் துடுப்பாட்ட வீரரும், டென்ன்சு வீராருமான தனது கணவர் விஜயராகவனை மணந்தார். [5] அடுத்த ஆண்டு, இவர்கள் ஜெர்மனியின் இசுடுட்கார்ட் நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு துடுப்பாட்டச் சங்கத்தில் மட்டையாளராக விளையாடத் தொடங்கிய இவரது கணவர், இவரையும் துடுப்பாட்டத்தில் பங்கேற்க இவரை ஊக்குவித்தார்.[6][5]

சொந்த வாழ்க்கை

தொகு

ஜெர்மனி அணியில், பெங்களூரைச் சேர்ந்த அனுராதா தொட்டபல்லாபூர் மற்றும் சரண்யா சதராங்கனி ஆகிய இருவரும் இவருடன் விளையாடுகின்றனர்.[5] களத்திற்கு வெளியே, ஸ்டட்கார்ட்டில் உள்ள ஒரு சுகாதார காப்பீட்டு நிறுவனத்தில் கார்த்திகா விஜயராகவன் பணியாற்றுகிறார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Karthika Vijayaraghavan". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.
  2. "How Bengaluru gully cricketers starred in German national team". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/how-bengaluru-gully-cricketers-starred-in-german-national-team/articleshow/78485093.cms. 
  3. Harvey, Rob (23 August 2020). "Interview: Karthika Vijayaraghavan". Talkinaboutwomenscricket.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.
  4. Yerasala, Ikyatha (15 February 2022). "Gully Girl: How B'luru lass Karthika became Germany's wicket-keeper". Global Indian. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
  5. 5.0 5.1 5.2 5.3 Yerasala, Ikyatha (15 February 2022). "Gully Girl: How B'luru lass Karthika became Germany's wicket-keeper". Global Indian. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.Yerasala, Ikyatha (15 February 2022). "Gully Girl: How B'luru lass Karthika became Germany's wicket-keeper". Global Indian. Retrieved 1 March 2022.
  6. Harvey, Rob (23 August 2020). "Interview: Karthika Vijayaraghavan". Talkinaboutwomenscricket.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.Harvey, Rob (23 August 2020). "Interview: Karthika Vijayaraghavan". Talkinaboutwomenscricket.com. Retrieved 19 July 2021.
  7. Vijayaraghavan, Karthika (2019). "Nationalspielerin Karthika erzählt wie sie in die deutsche Nationalmannschaft aufgenommen wurde" [National player Karthika tells how she was accepted into the German national team]. TV Pflugfelden (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகா_விஜயராகவன்&oldid=4110994" இலிருந்து மீள்விக்கப்பட்டது