கார்த்திக் மொகாபத்ரா

இந்திய அரசியல்வாதி

கார்த்திக் மொகாபத்ரா (Kartik Mohapatra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா சட்டப் பேரவையில் 1990, 1995, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

கார்த்திக் மொகாபத்ரா
Kartik Mohapatra
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1991–1998
முன்னையவர்சமரேந்திர குண்டு
பின்னவர்காரபேலா சுவைன்
தொகுதிபாலாசூர் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசாம்பு, பாலேசுவர் மாவட்டம் , ஒடிசா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இந்துராணி மொகாபத்ரா
மூலம்: [1]

கார்த்திக் இந்துராணி மொகாபத்ராவை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி இந்துமணி 1996 ஆம் ஆண்டு டயர் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 11 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 324. பார்க்கப்பட்ட நாள் 16 November 2019.
  2. Statistical Report on General Elections, 1996 to the Eleventh Lok Sabha: National and state abstracts. Election Commission of India. 1996. p. 8. பார்க்கப்பட்ட நாள் 16 November 2019.
  3. "Odisha House pays tribute to Kalam, J B Patnaik and others". தி எகனாமிக் டைம்ஸ். 18 August 2015. பார்க்கப்பட்ட நாள் 16 November 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_மொகாபத்ரா&oldid=3807043" இலிருந்து மீள்விக்கப்பட்டது