கார்பாக்சிமைடேட்டு

கரிம வேதியியல் சேர்மம்

கார்பாக்சிமைடேட்டுகள் (Carboximidates) என்பவை R-C(=NR')OR" என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மங்களாகும். பொதுவாக இவற்றை இமைடேட்டுகள் என்று அழைக்கிறார்கள். கார்பாக்சிமைடிக் அமிலமும் (R-C(=NR')OH) ஓர் ஆல்ககாலும் வினைபுரிவதால் உருவாகின்ற எசுத்தர்களாக இவை கருதப்படுகின்றன.

கார்பாக்சிமிடேட்டு தொகுதி

இமைன்களில் (>C=N-) இணைக்கப்பட்டிருக்கும் ஆக்சிசன் அணு கார்பன் அணு பிணைப்பைப் போல இவற்றிலும் இணைக்கப்படுள்ளதால் இவற்றை இமைனோ எசுத்தர்கள் என்றும் கூறுகிறார்கள்.

தயாரிப்பு

தொகு

பல்வேறு செயற்கை முறைகளில் இமைடேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன [1]. ஆனால் பின்னெர் வினை பொதுவான தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது. நைட்ரைல்களை அமில வினையூக்கியின் உதவியால் தாக்கும் ஆல்ககால்கள் மூலமாக இவ்வினை நிகழ்கிறது.

 
பின்னெர் வினையின் பொது வழிமுறை[2]

இம்முறையில் தயாரிக்கப்படும் இமைடேட்டுகள் அவற்றின் ஐதரோகுளோரைடு உப்புகளாகும். இவை சில சமயங்களில் பின்னெர் உப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மம் மறுசிரமைப்பு வினை மற்றும் ஓவர்மான் மறுசீராக்கல் வினை போன்ற வினைகளில் கார்பாக்சிமைடேட்டுகள் இடைநிலைப் பொருட்களாகவும் உருவாகின்றன.

இமைடேட்டு/அமைடேட்டு எதிர்மின் அயனிகள்

தொகு

ஓர் அமைடு அல்லது இமைடிக் அமிலம் புரோட்டான் நீக்கமடைவதால் இமைடேட்டு/அமைடேட்டு எதிர்மின் அயனிகள் தோன்றுகின்றன. அமைடுகளும் இமைடிக் அமிலங்களும் வடிவமாற்றியன்கள் என்பதனால் இவை புரோட்டான் நீக்கத்தால் ஒரே மாதிரியான எதிர்மின் அயனியாக உருவாகின்றன. இந்த இரண்டு பெயர்களும் ஒரே அயனியை விவரிக்கும் ஒத்தச் சொற்களாகும். இருப்பினும் இவை விவாதத்திற்கு உரியனவாக உள்ளன. ஒத்திசைவு பங்களிப்பை இமைடேட்டு இடது பக்கத்திலும் அமைடேட்டு வலது பக்கத்திலும் வழங்குகின்றன. இருப்பினும் இடைநிலைத் தனிமங்களில் ஈந்தணைவிகளாகச் செயலாற்றும்போது இவை வேறுபடுத்தி அடையாளம் காணப்படுகின்றன. ஆக்சிசனுடன் பிணைக்கப்பட்ட இனங்கள் இமைடேட்டுகள் என்றும் நைட்ரசனுடன் பிணைக்கப்பட்ட இனங்கள் அமைடேட்டுகள் என்றும் இங்கு அறியப்படுகின்றன. இவற்றை அசா பதிலிடப்பட்ட இனோலேட்டு ஒத்தவை என்றும் கருதவியலும். இவற்றின் பொதுவாய்ப்பாடு R-N=C(O−)R ஆகும்.

 
இமைடேட்டு/அமைடேட்டு ஒத்திசைவு

வினைகள்

தொகு

கார்பாக்சிமைடேட்டுகள் நல்ல மின்னனுகவரிகளாகும். இவை பல்வேறு வகையான கூட்டு வினைகளில் பங்கேற்கின்றன. பொதுவாக அலிபாட்டிக் இமைடேட்டுகள் அரோமாட்டிக் இமைடேட்டுகளைக்காட்டிலும் விரைவாக வினைபுரிகின்றன [1]. இவற்றை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி எசுத்தர்களைப் பெறவியலும். இதேவகை வினையில் அமோனியா மற்றும் அமீன்களுடன் வினைபுரியும்போது அமீடின்கள் உருவாகின்றன. அலிபாட்டிக் இமைடேட்டுகள் ஓர் அமில வினையூக்கியின் உதவியோடு மிகையளவு ஆல்ககாலுடன் வினை புரிந்து ஆர்த்தோ எசுத்தர்களாக (RC(OR)3) உருவாகின்றன. அரோமாட்டிக் இமைடேட்டுகளும் இதேவகை மாற்றத்திற்கு உட்பட்டு ஆனால் மெதுவாக மாறுகின்றன.

 

சேப்மேன் மறுசீராக்கல் வினை

தொகு

ஆர்தர் வில்லியம் சேப்மேன் முதன் முதலில் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை சேப்மேன் மறுசீராக்கல் வினை என்று அழைக்கப்படுகிறது [3]. இவ்வினையில் என்-அரைல்பென்சிமைடேட்டுகள் தொடர்புடைய அமைடுகளாக வெப்பமாற்றம் செய்யப்படுகின்றனறன [4]. கருத்துரு அடிப்படையில் இவ்வினை நியுமான்-குவார்ட் மறுசீராக்கல் வினையை ஒத்த வினையாகும்.

 
சேப்மேன் மறுசீராக்கல் வினை

.

பாதுகாக்கும் குழு

தொகு
 
Benzyl டிரைகுளோரோயீத்தேனிமைடேட்டு

கார்பாக்சிமைடேட்டுகளால் ஆல்ககால்களை பாதுக்காக்கும் குழுக்களாகச் செயல்படமுடியும் [5]. உதாரணமாக பென்சைல் ஆல்ககாலின் கார வினையூக்கி வினையில் டிரைகுளோரோ அசிட்டோநைட்ரைல் சேர்மமானது டிரைகுளோரோ அசிட்டிமைடேட்டைக் கொடுக்கிறது. இவ்வினம் அசிட்டேட்டுக்கு செங்குத்தான நிலைப்புத்தன்மையையும் சிலில் ஈத்தர் பாதுகாப்பையும் பெற்றுள்ளது. அமில நீராற்பகுப்பால் இதைப் பிளக்க இயலும் [6].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Roger, Robert; Neilson, Douglas G. (1961). "The Chemistry of Imidates.". Chemical Reviews 61 (2): 179–211. doi:10.1021/cr60210a003. 
  2. B. P. Mundy, M. G. Ellerd, F. G. Favaloro: Name Reactions and Reagents in organic Synthesis, 2. Auflage, Wiley-Interscience, Hoboken, NJ 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-22854-7, S. 516.
  3. Chapman, Arthur William (1925). "CCLXIX.—Imino-aryl ethers. Part III. The molecular rearrangement of N-phenylbenziminophenyl ether". J. Chem. Soc., Trans. 127 (0): 1992–1998. doi:10.1039/CT9252701992. 
  4. Schulenberg, J. W.; Archer, S. (1965). "The Chapman Rearrangement". Org. React. 14. doi:10.1002/0471264180.or014.01. 
  5. Wuts, Peter G. M.; Greene, Theodora W. (2006). Protective groups in organic synthesis (4th ed.). Hoboken, N.J.: WILEY. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-69754-1.
  6. Yu, Biao; Yu, Hai; Hui, Yongzheng; Han, Xiuwen (June 1999). "Trichloroacetimidate as an Efficient Protective Group for Alcohols". Synlett 1999 (6): 753–755. doi:10.1055/s-1999-2736. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பாக்சிமைடேட்டு&oldid=3084223" இலிருந்து மீள்விக்கப்பட்டது