கார்போ அல்காக்சிலேற்றம்

ஆல்க்கீன்களை எசுத்தராக்கும் வேதிவினை

கார்போ அல்காக்சிலேற்றம் (Carboalkoxylation) என்பது என்பது ஆல்கீன்களை எசுத்தர்களாக மாற்றுவதற்கான ஒரு செயல்முறையாகும். இந்த வினை கார்பனைலேற்ற வினையின் ஒரு வடிவமாகும். நெருங்கிய தொடர்புடைய வினையாக ஐதரோகார்பனைலேற்ற வினையைக் குறிப்பிடலாம். இவ்வினை ஆல்ககால்களுக்குப் பதிலாக தண்ணீரைப் பயன்படுத்துகிறது.

மீத்தைல் புரோப்பியோனேட்டைத் தயாரிக்கும் எத்திலீனை கார்போமெத்தாக்சிலேற்ற வினை ஒரு வணிகப் பயன்பாட்டு வினையாகும்:[1]

C2H4 + CO + MeOH → MeO2CC2H5

Pd[C6H4(CH2PBu-t)2]2. இவ்வினையில் வினையூக்கியாகச் சேயல்படுகிறது. இதே போன்ற நிலைமைகளின் கீழ் மற்ற Pd- இருபாசுபீன்கள் பாலியெத்திலீன் கீட்டோன் உருவாவதை ஊக்குவிக்கிறது.

மீத்தைல் புரோப்பியோனேட்டு எசுத்தர் என்பது மெத்தில் மெத அக்ரிலேட்டுக்கு ஒரு முன்னோடியாகும். இது நெகிழிகள் மற்றும் பிசின்களில் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு சிறு பலபடியாக்கல் வினை திட்டங்களில் கார்போ அல்காக்சிலேற்றம் இணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கார்போ அல்காக்சிலேற்றம் 1,3-பியூட்டாடையீன் இருபடியாதல் வினை உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த படி, நிறைவுறாத C9-எசுத்தரை உருவாக்குகிறது.

2 CH2=CH-CH=CH2 + CO + CH3OH → CH2=CH(CH2)3CH=CHCH2CO2CH3

ஐதரோ எசுத்தராக்கல் வினை தொகு

கார்போ அல்காக்சிலேற்றம் வினையுடன் ஐதரோ எசுத்தராக்கல் வினை தொடர்புடைய வினையாகக் கருதப்படுகிறது. ஐதரோ எசுத்தராக்கல் வினையில் கார்பாக்சிலிக் அமிலங்களின் H-O பிணைப்பில் ஆல்க்கீன்கள் மற்றும் ஆல்கைன்களை அறிமுகப்படுத்தப்படுகிறது. வினைல் அசிடேட்டு துத்தநாக அசிடேட்டு வினையூக்கியின் முன்னிலையில் அசிட்டிலீனுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது:[2] Presently, zinc acetate is used as the catalyst:

CH3CO2H + C2H2 → CH3CO2CHCH2

மேற்கோள்கள் தொகு

  1. Ahmad, Shahbaz; Bühl, Michael (2021-08-04). "Computational modelling of Pd-catalysed alkoxycarbonylation of alkenes and alkynes" (in en). Physical Chemistry Chemical Physics 23 (30): 15869–15880. doi:10.1039/D1CP02426D. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9084. பப்மெட்:34318843. Bibcode: 2021PCCP...2315869A. 
  2. Bienewald, Frank; Leibold, Edgar; Tužina, Pavel; Roscher, Günter (2005), "Vinyl Esters", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, pp. 1–16, doi:10.1002/14356007.a27_419.pub2