கார்லினா இலெக்சோனா சுபெல்லி
கார்லினா இலெக்சோனா சுபெல்லி (Karlina Leksono Supelli) (பிறப்பு:ஜகார்த்தா 15 ஜனவரி 1958)ஓர் இந்தோனேசிய மெய்யியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் இந்தோனேசியாவின் முதல் பெண் வானியலாளர் ஆவார். இந்தோனேசியாவிலுள்ள பாண்டுங் தொழில்நுட்பக் கல்லூரியில் இவர் இளநிலை பட்டம் பெற்றார்.[1] இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் விண்வெளி அறிவியலில் மூதறிவியல் பட்டம் பெற்றார். பின்னர், மெய்யியலுக்கு மாறினார். இவர் 1997 இல் இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் 1998 இந்தோனேசியா சீர்திருத்தக் காலத்தில் மாந்தநேயச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். இவரது தலைமையில் 1998 பிப்ரவரியில் அக்கறையுள்ள தாய்மார்கள் இந்தோனேசிய உணவகத்தின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், காடிசு அரிவியா, விலாசிக் நொவியானா ஆகிய இருபெண்களோடு சிறையெடுக்கப்பட்டார்.
ஒரு பெண்ணியவாதியாக கார்லினா, பல நூறு சீன இந்தோனேசியர்கள் ஜகார்த்தாவில் கற்பழிக்கப்பட்ட 1998 இந்தோனேசிய மே வன்முறை கொடுமைக்கு ஆளானவர்களின் நிலைமையை வெளிப்படுத்தவும் அவர்களது உரிமைகளைக் காக்கவும் போராடினார். இவர் இந்தோனேசியாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க அமெரிக்காவுக்கே சென்று தனக்குப் பல கொலை அச்சுறுத்தல்கள் வந்தபோதும் கவலைப்படாமல் அமெரிக்க அரசிடம் போராடினார். இவர் இந்தோனேசியப் படை வீர்ர்களால் கற்பழிக்கப்பட்ட அசெகுனீசு, கிழக்குத் திமோரிய பெண்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
இவர் பல இந்தோனேசியப் பல்கலைக்கழகங்களில் வானியலும் மெய்யியலும் கற்பித்துள்ளார்.இவரது எழுத்துகள் இந்தோனேசியாவிலும் வெளிநாட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவர் இப்போது Sekolah Tinggi Filsafat Driyarkara (ஜகார்த்தாவில் உள்ள திரியர்காரா உயர்நிலை மெய்யியல் பள்ளியில்) கல்வி பயிற்றுவிக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ULUNG, A. Kurniawan (14 August 2017). "Karlina Supelli: Understanding life through philosophy". The Jakarta Post. http://www.thejakartapost.com/life/2017/08/14/karlina-supelli-understanding-life-through-philosophy.html.
வெளி இணைப்புகள்
தொகு- Supelli, Karlina Leksono பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம்
- Vanessa Johanson talks with Khofifah Indar Parawansa
- Indonesian Chinese Marginalized?
- Wawancara Karlina Leksono: "Kita Sudah Terlalu Lama Diam" at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது மார்ச்சு 8, 2012)
- Problematizing the Place of Victims in Reformasi Indonesia: A Contested Truth about the May 1998 Violence
- Gendered citizens in the new Indonesian democracy
- Cohen, Matthew Isaac (6 March 2002). "Indonesia. Television, Nation, and Culture in Indonesia. By PHILIP KITLEY. Athens: Ohio University Center for International Studies, 2000. Pp. xviii, 411. Illustrations, Tables, Bibliography, Index.". Journal of Southeast Asian Studies 33 (01). doi:10.1017/S0022463402290086.
- Better Protection Of Rapes Investigators Needed