கார்ல் வியர்ஸ்ட்ராஸ்

கார்ல் தியோடர் வில்ஹெம் வியர்ஸ்ட்ராஸ் (Karl Theodor Wilhelm Weierstrass, அக்டோபர் 31, 1815பெப்ரவரி 19, 1897) என்பவர் ஒரு ஜெர்மானிய கணிதவியலர். இவர் கணிதப் பகுவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

கார்ல் வியர்ஸ்ட்ராஸ்
Karl Weierstrass
Karl Weierstrass.jpg
பிறப்புஅக்டோபர் 31, 1815(1815-10-31)
பிரசியா
இறப்புபெப்ரவரி 19, 1897(1897-02-19) (அகவை 81)
பெர்லின், ஜெர்மனி
வாழிடம்Flag of Germany.svg ஜெர்மனி
தேசியம்Flag of Germany.svg ஜெர்மன்
துறைகணிதவியலர்
பணியிடங்கள்பெர்லின் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பொன் பல்கலைக்கழகம்
மூன்ஸ்டர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கிறிஸ்தோப் கூடர்மான்
அறியப்படுவதுவியர்ஸ்ட்ராஸ் சார்பு

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

வியர்ஸ்ட்ராஸ் பிரசியாவின் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போதே கணிதத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட வியர்ஸ்ட்ராஸ் பொன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அவர் அங்கு சட்டம், பொருளாதாரம் ஆகிய பாடங்களையே படிக்க வேண்டி ஏற்பட்டது. ஆனாலும் கணிதத்தை வெளிவாரியாகப் படிப்பதில் ஆர்வம் காட்டினார். முடிவில் அவரால் அங்கு பட்டம் பெற முடியவில்லை. பின்னர் மூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இணைந்து கணிதத்தைப் படித்து முடித்தார். த் தொடர்ந்தார். படிப்பை முடித்தது நகரின் பள்ளி ஒன்றில் ஆசிரியப் பணியில் அமர்ந்தார். இக்காலகட்டத்தில் வியர்ஸ்ட்ராஸ் கிறிஸ்டோப் கூடர்மானின் விரிவுரைகளுக்குச் சென்று நீள்வட்ட சார்புகளில் ஆர்வம் கொண்டார்.

1850 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வியர்ஸ்ட்ராஸ் நீண்ட காலம் சுகவீனமுற்றவரானார். ஆனாலும் அவர் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். பின்னர் அவர் பெர்லின் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் தலைவர் ஆனார். இவரது கடைசி மூன்றாண்டு காலங்கள் கடும் சுகவீனமுற்று 1897 ஆம் ஆண்டில் நுரையீரல் அழற்சியுற்று இறந்தார்.

வெளி இணைப்புகள்தொகு