கார்வா கோட்டை

அகமதாபாத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை

கார்வா கோட்டை (Garhwa Fort) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் உள்ள ஒரு கோயில் வளாகமாகும். இது குப்தர் காலத்தைச் சேர்ந்ததாகும்.[1][2] கோவிலின் இடிபாடுகள் 18 ஆம் நூற்றாண்டில் ராசா பாகேல் ராசா விக்ரமாதித்யாவால் பலப்படுத்தப்பட்டன. கோட்டை ஒரு வகையான சதுரமான உள்ளகம் மற்றும் அணிவகுப்புகளைக் கொண்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த கோட்டையில் குப்தர் காலத்தைச் சேர்ந்த பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. இவை 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களையும் குறிக்கும் ஒரு உருவம் கோட்டையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.[3][4]

கார்வா கோட்டை
Garhwa Fort
அமைவிடம்பிரயாக்ராஜ்
கட்டப்பட்டது5-6 ஆம் நூற்றாண்டுகள்
மீட்டெடுத்தவர்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
கட்டிட முறைஇந்து கட்டடக் கலை
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
சிற்பங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "GOVERNMENT OF INDIA DEPARTMENT OF ARCHAEOLOGY CENTRAL ARCHÆOLOGICAL LIBRARY" (PDF). Indira Gandhi National Centre for the Arts. India: Indira Gandhi National Centre for the Arts.
  2. Kumar, Arjun (2018-12-20). "Some iconic, historical landmarks that lent Allahahad its identity & a new name". The Economic Times. India: தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.
  3. Rashid, Omar (2013-03-30). "Rising from the ruins" (in en-IN). The Hindu (தி இந்து). https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/rising-from-the-ruins/article4558717.ece. 
  4. "गढ़वा के किले में होगा इतिहास का दीदार". Dainik Jagran (in இந்தி). Dainik Jagran. பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்வா_கோட்டை&oldid=3793203" இலிருந்து மீள்விக்கப்பட்டது