காற்றுக் கோபுரம்

காற்றுக் கோபுரம் என்பது, கட்டிடங்களுக்குள் இயற்கையான காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படும் ஒரு உயரமான அமைப்பாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரசீகக் கட்டிடக்கலையில் அம்சங்களில் ஒன்றாகத் திகழும் இது இன்று மத்திய கிழக்கின் பல நாடுகளின் பாரம்பரியமான கட்டிடங்களில் காணப்படுகின்றது.[1][2][3]

ஈரானின், யாஸ்த் என்னும் இடத்தில் உள்ள தோலத்-அபாத்கட்டிடத்தின் காற்றுக் கோபுரம்.

வெப்பம் மிகுந்த பாலைவன நாடுகளில் நிலமட்டத்துக்கு அருகில் காற்றோட்டம் மிகவும் குறைவாக இருப்பதுடன், காற்று மிகவும் சூடாகவும் காணப்படும். இதனால், நிலமட்டத்திலிருந்து ஓரளவு உயரத்தில் வீசுகின்ற வெப்பம் குறைந்த காற்றைக் கட்டிடங்களின் உட்பகுதிகளை நோக்கித் திருப்பிவிடுவதே காற்றுக் கோபுரங்களின் நோக்கமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Malone, Alanna. "The Windcatcher House". Architectural Record: Building for Social Change. McGraw-Hill. பார்க்கப்பட்ட நாள் 27 July 2023.
  2. Plumer, Brad (16 February 2021). "A Glimpse of America's Future: Climate Change Means Trouble for Power Grids". The New York Times. https://www.nytimes.com/2021/02/16/climate/texas-power-grid-failures.html. 
  3. "U.S. power and natgas prices spike in Texas and California heatwaves" (in en). Reuters. 16 June 2021. https://www.reuters.com/business/energy/us-power-natgas-prices-spike-texas-california-heatwaves-2021-06-15/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுக்_கோபுரம்&oldid=3890043" இலிருந்து மீள்விக்கப்பட்டது