காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள காலடிபேட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[4][5][6] இக்கோயில் சுமார் 450 ஆண்டுகள் தொன்மையான பெருமை கொண்டது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் பிரதி போல உருவாக்கப்பட்ட மூலவர் இக்கோயிலில் காட்சியளிக்கிறார்.[7]
காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°09′12″N 80°17′48″E / 13.1534°N 80.2966°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்[1] |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | காலடிபேட்டை, திருவொற்றியூர் |
ஏற்றம்: | 56 m (184 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கல்யாண வரதராஜ பெருமாள் |
தாயார்: | பெருந்தேவி தாயார் |
குளம்: | உண்டு |
சிறப்புத் திருவிழாக்கள்: | இராம நவமி, பங்குனி உத்திரம் |
உற்சவர்: | பவளவண்ண பெருமாள் |
உற்சவர் தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உள்ளன[2] |
வரலாறு | |
கட்டிய நாள்: | 450 ஆண்டுகள் தொன்மையானது[3] |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°09′12″N 80°17′48″E / 13.1534°N 80.2966°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி தாயார் ஆவர்.[8] மேலும், உற்சவர் பவளவண்ண பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் ஆவர்.
கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி,[9] இராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி[10] ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kalyana Varadharaja Perumal Temple - Thiruvottiyur". Kalyana Varadharaja Perumal Temple - Thiruvottiyur. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ Veludharan's Temples Visit (2017-06-14). "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Kalyana Varadharaja Perumal Temple / ஸ்ரீ கல்யாண வரதராஜபெருமாள் கோயில், Kaladipet, Thiruvotriyur, Chennai, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ R.Mohanram (2022-05-31). "திருவொற்றியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ "Kalyana Varadaraja Perumal Temple, Kaladipet, Chennai suburb". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ Anudinam Volunteer (2014-01-15). "Sri Andal Thirukalyanam At Kaladipet Sri Kalyana Varadharaja Perumal Temple". Archive Anudinam.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ "The Kalyana Varadaraja Swami Temple, Kaladipet (Colletpet) - Madras Heritage and Carnatic Music". sriramv.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ Ilamurugan (2018-09-07). "Tamilnadu Tourism: Kaladipet Kalyana Varadharaja Perumal Temple, Thiruvotriyur, Chennai". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ "Kalyana Varadaraja Perumal Temple : Kalyana Varadaraja Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ தினத்தந்தி (2019-02-11). "திருவொற்றியூரில் பெருமாள் கோவில் ராஜகோபுரம் பணி முடிவது எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ "Kalyana Varadaraja Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.