காலந்தீடீ
காலந்தீடே | |
---|---|
கிரமட்டோநாட்டசு பிரியேனே | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பெர்கோடியே
|
குடும்பம்: | காலந்தீடே
|
பேரினங்கள்[1] | |
காலந்தியாசு |
காலந்தீடே (Callanthiidae), பேர்சிஃபார்மசு வரிசையினை சேர்ந்த சிறிய மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 3 பேரினங்களும் இவற்றுள் அடங்கிய 14 சிற்றினங்களும் உள்ளன. இக்குடும்ப மீன்கள் பெரும்பாலும் இந்திய மற்றும் அமைதிப் பெருங்கடல்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு வெளியே தென்கிழக்கு அட்லாண்டிக்கின் காலந்தியாசு லெக்ராசு மற்றும் கிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்தியதரைக் கடலின் க. ரூபர் மட்டுமே காணப்படுகின்றன. பிரகாசமான வண்ண மீன்கள் ஒப்பீட்டளவில் ஆழமான நீரில் காணப்படுகின்றன. இவற்றினை சாதாரண இசுகூபா மூழ்கல் மூலம் அடையக்கூடிய ஆழத்தில் காணலாம். காலந்தீடே என்ற அறிவியல் பெயரால் பரிந்துரைக்கப்பட்டபடி, இவை அந்தியாசு (துணைக் குடும்பம் அந்தினே, குடும்பம் செரானிடே) உடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
வகைப்பாட்டியல்
தொகு- கலந்தியாசு (Callanthias) பேரினம்
- கலந்தியாசு ஆல்போர்ட்டி (Callanthias allporti)
- கலந்தியாசு யப்போனிக்கசு (Callanthias japonicus)
- கலந்தியாசு லெக்ராசு (Callanthias legras)
- கலந்தியாசு பாரினி (Callanthias parini)
- கலந்தியாசு பிளாட்டீ (Callanthias platei)
- கலந்தியாசு ரூபர் (Callanthias ruber)
- கலந்தியாசு இசுப்பிளெண்டென்சு (Callanthias splendens)
- கிரமட்டோநாட்டசு (Grammatonotus) பேரினம்
- கிரமட்டோநாட்டசு லேசனசு (Grammatonotus laysanus)
- கிரமட்டோநாட்டசு மக்குரோப்தலமசு (Grammatonotus macrophthalmus)
- கிரமட்டோநாட்டசு சுருகீன்சிசு (Grammatonotus surugaensis)
- பராபரோசியா (Parabarossia) பேரினம்
- பராபரோசியா லன்சியோலாட்டா (Parabarossia lanceolata)
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- Froese, Rainer, and Daniel Pauly, eds. (2006). "Callanthiidae" in FishBase. March 2006 version.
வெளியிணைப்புக்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). "Callanthiidae" in FishBase. February 2013 version.