காலவரிசை ஒத்திசைவு
காலவரிசை ஒத்திசைவு (Chronological synchronism) என்பது இரண்டு காலவரிசைகளை இணைக்கும் நிகழ்வு ஆகும். உதாரணமாக, எகிப்தியலில் எகிப்திய காலவரிசையை மற்ற காலவரிசைகளோடு இணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலவரிசை ஒத்திசைவுகளின் முக்கிய வகைகள், பிற வரலாற்றுக் காலவரிசைகளோடு இசைவுபடுத்துவதும் சாியான புள்ளிவிவர அடிப்படையில் அமைந்த வானியல் நிகழ்வுககளோடு இசைவுபடுத்துவதுமாகும். பிற காலவரிசைகளோடு இணைப்பதற்கு, நிலப்பகுதிகளுக்கிடையே நிகழ்ந்த தொடர்புகளின் பதிவுவுகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, கிமு 15 ஆம் நூற்றாண்டில் அமர்னா காலகட்டத்தில், அத்தகைய இணைப்புகள் நடந்துள்ளன. மூன்றாம் அமென்கோதேப், அக்கெனதென், பண்டைய அண்மைக் கிழக்கு அரசர்கள் ஆகியோருக்கிடையே இருந்த அதிகாரபூர்வமான தொடர்புகளால் எகிப்திய காலவரிசையை, அண்மைக் கிழக்கு காலவரிசைகளோடு இணைக்க முடிந்தது.
வானியல் ஒத்திசைவுகளுக்கு வரலாற்று ஏட்டில் இடம்பெற்றுள்ள வானியல் நிகழ்வுகளின் துல்லியமான பதிவுகள் தேவை. சதி சுழற்சியை நன்கு ஆய்வு செய்த ரிச்சர்டு அந்தோணி பார்க்கர், அதனைக் கொண்டு, எகிப்தின் 12 ஆவது பேரரரின் காலக்கோடுகளைத் துல்லியமாகக் கணிக்கலாம் என்று கூறினார்.[1] ஆனால் அண்மைய ஆய்வுகள் சதிக் சுழற்சியை நம்பகத்தக்கதாக ஏற்காததால், வல்லுநர்கள் அதனை ஆதாரமாகக் கொள்வதைக் கைவிட்டுவிட்டனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Set forth in "Excursus C: The Twelfth dynasty" in his The Calendars of ancient Egypt (Chicago: University Press, 1950).
- ↑ One example is Patrick O'Mara, "Censorinus, the Sothic Cycle, and calendar year one in ancient Egypt: the Epistological problem", Journal of Near Eastern studies, 62 (2003), pp. 17-26.