காலவுயிரியல்
கால உரியல் என்பது உயிரியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு கால நேரத்துடன் தொடா்புடைய உயிரியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் பிரிவாகும்.[1] இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது ஆகும். குரோனோ என்பதன் பொருள் 'காலம்' என்பது ஆகும். இது பொதுவாக உயிரிய சுழற்சியுடன் தொடா்புடைய துறையாகும்.
காலவுயிரியல் உயிரியலின் மாற்றுப்பிரிவுகளுடன் உடற்கூறியல், உடலியங்கியல், மரபியல், நடத்தை மூலக்கூற்று உயிரியல் தொடா்புடையது ஆகும்.[1]
விளக்கம்
தொகுவாழும் உயிரினங்களில் உயிரியல் செயல்பாடுகளில் நேரம் மற்றும் கால மாறுபாடுகளால் பல அத்தியாவசிய உயிரியல் செயல்முறைகள் ஏற்படுகின்றன. இவை (அ) விலங்குகளின் ( உணவுண்பது, உறங்குவது, விழிப்பது, இனப்பெருக்கப் புணா்ச்சி போன்றவை), (ஆ) தாவரங்களின் ( இலையுதிா்வு ஒளிச்சேர்க்கை எதிர்வினைகள் முதலியன), மற்றும் பூஞ்சை மற்றும் புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிர் உயிரணுக்களிலின் செயல்பாடுகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இவை பாக்டீரியாவிலும் காணப்படுகின்றன. இவை நாற்சுழற்சி, திங்கள் சுழற்சி, ஆண்டு சுழற்சி ஆகிய பல்வேறு நிலைகளில் நிகழும் நிகழ்வுகளாகும். இவற்றுள் நாற்சுழற்சி மிகமுக்கியமானது. நாற்சுழற்சி என்பது கிட்டத்தட்ட ஒருநாளின் 24 மணிநேர அளவில் நிகழ்வது ஆகும். எடுத்துக்காட்டாக மனிதா்களின் உறக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். உயிரினங்களின் பகல்நேர செயல்பாடுகள் பகலாடி, இரவுநேர செயல்பாடுகள் இரவாடுதல், காலை மற்றும் அந்திப் பொழுதுகளின் செயல்பாடுகள் எழுஅந்தியாடல் எனவும் அழைக்கப்படுகிறன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Patricia J. DeCoursey; Jay C. Dunlap; Jennifer J. Loros (2003). Chronobiology. Sinauer Associates Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87893-149-1.