காலிது பின் முகமது அல் நகியான்

அபுதாபியின் முடிக்குரிய இளவரசர்

சேக் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான் (ஆங்கில மொழி: Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, அரபு மொழி: خالد بن محمد بن زايد آل نهيان‎), அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத்தலைவரான சேக் முகமது பின் சயீது அல் நகியானின் மூத்த மகன்.[1][2]

காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான்
خالد بن محمد بن زايد آل نهيان
அபுதாபியின் முடிக்குரிய இளவரசர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 மார்ச் 2023
நியமிப்புமுகமது பின் சயீது அல் நகியான்
முன்னையவர்முகமது பின் சயீது அல் நகியான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சனவரி 1982 (1982-01-08) (அகவை 42)
 அபுதாபி
 ஐக்கிய அரபு அமீரகம்
துணைவர்பாத்திமா பிந்த் சுரூர் அல் நகியான்[1]
பிள்ளைகள்சம்மா
முகமது
சலாமா
பெற்றோர்தந்தை: முகமது பின் சயீது அல் நகியான்
தாய்: சலாமா பிந்த் அம்தான் அல் நகியான்

பணி மற்றும் பதவிகள்

தொகு

2016ஆம் ஆண்டு அமைச்சர் தகுதிநிலையில் பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும், அபுதாபி செயல் அலுவலகத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.[3][4][5]

2023ஆம் அண்டு மார்ச் 29இல் தனது தந்தை மற்றும் அபுதாபியின் ஆட்சியாளரான சேக் முகமது பின் சயீது அல் நகியானால் அபுதாபி அமீரகத்தின் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டார்.[2]

இளமைப் பருவம் மற்றும் கல்வி

தொகு

சேக் காலிது, 8 ஜனவரி 1982இல் அபுதாபியில் பிறந்தார். இவர் அபுதாபியை ஆளும் அல் நகியான் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சார்ஜாவிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில், சர்வதேச உறவு என்னும் பிரிவில் பயின்று இளநிலை பட்டம் பெற்றார். 2014ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார்.[6]

குடும்பம்

தொகு

2008ஆம் ஆண்டு திசம்பரில் சேக்கா பாத்திமா பிந்த் சுரூர் பிந்த் முகமது அல் நகியானை மணந்த இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.[6]

வம்சாவளி

தொகு
முன்னோர்கள்: காலிது பின் முகமது அல் நகியான்
8. சேக் சுல்தான் பின் சயீது பின் கலீபா அல் நகியான்
4. சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்
9. சேக்கா சல்மா பிந்த் புட்டி அல் குபைசி
2. சேக் முகமது பின் சயீது பின் சுல்தான் அல் நகியான்
10. சேக் முபாரக் அல் கெத்பி
5. சேக்கா பாத்திமா பின்த் முபாரக் அல் கெத்பி
1. சேக் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான்
12. சேக் முகமது அல் நகியான்
6. சேக் அம்தான் பின் முகமது அல் நகியான்
3. சேக்கா சலாமா பிந்த் அம்தான் அல் நகியான்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ரோமி அண்ட் (30 March 2023). "யார் இந்த சேக் காலிது?". www.whatson.ae. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  2. 2.0 2.1 "அபுதாபி அமீரகத்தின் தலைவர் தனது மூத்த மகனை முடிக்குரிய இளவரசராக நியமித்தார்". www.apnews.com. அசோசியேட்டட் பிரெசு. 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  3. சகீனா பாத்திமா (30 March 2023). "முடிக்குரிய இளவரசராக சேக் காலிது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டார்". www.siasat.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  4. "காலீது பின் முகமது பின் சயீது ஆட்நாக்கின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்". www.wam.ae. 20 October 2021. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  5. "சேக் காலீது பின் முகமது தேசிய பதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்". www.khaleejtimes.com. 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  6. 6.0 6.1 கைதம் அல் அமீர் மற்றும் அசுவக் அகமது (29 March 2023). "சேக் காலிது: ஒரு தலைவரின் உருவாக்கம்". www.gulfnews.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.