காலியான்குட்டி
காலியான்குட்டி | |
---|---|
Buff striped keelback at Yavatmal | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | Colubridae
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. stolatum
|
இருசொற் பெயரீடு | |
Amphiesma stolatum (L., 1758) | |
வேறு பெயர்கள் | |
காலியான்குட்டி அல்லது புல்லுருவிப் பாம்பு[2], நீர்க்காத்தான் குட்டி (Amphiesma stolatum) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இது ஆசியா கண்டத்தில் காணப்படுகிறது.. இது தவளை, தேரை . போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இது நீர் பாம்பு, புல் பாம்பு ஆகியவற்றை ஒத்திருக்கும்.
விளக்கம்
தொகுஇது ஒரு சிறிய, மெல்லிய பாம்பு. இது கரும்பச்சை நிறத்தில் இருக்கும். மொத்த நீளத்தில் கால்பகுதி இதன் மெல்லிய வாலே. முதுகின் இருபக்கத்திலும் தலையிலிருந்து வால் வரை இரண்டு மஞ்சள் கோடுகள் காணப்படும். இதன் உடலில் உள்ள செதில்கள் கரடுமுரடாக இருக்கும்.
இப்பாம்புகள் உடல் நீளம் வழக்கமாக 40 இல் இருந்து 50 செ.மீ (சுமார் 16 முதல் 20 அங்குளம்) ஆகும். அதிகபட்ச நீளம் 90 செ.மீ (35. 3/8). பெண் பாம்புகள் ஆண் பாம்பு களைவிட நீளமாக இருக்கும். அரிதாக 620 மிமீ (2.03 அடி) வரை இருக்கும்.
பரவல்
தொகுஇப்பாம்புகள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாக்கித்தான், இலங்கை , பிலிப்பைன்ஸ் , இந்தியா ( அந்தமான் தீவுகள் உட்பட ), வங்கதேசம் , நேபாளம் , பர்மா , தாய்லாந்து , லாவோஸ் , கம்போடியா, வியட்னாம் , இந்தோனேசாயா, தைவான்,சீனா ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியாவில் இப்பாம்பு மலைப்பகுதிகளில் 2,000 அடி (610 மீ) உயரம் வரை காணப்படுகிறது.
பாதுகாப்பு நிலை
தொகுஇப்பாம்புகள் அதன் வாழிட எல்லை முழுவதும் பாதுகாப்பு கவலை இல்லை எனக் கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழல்
தொகுவாழ்விடம்
தொகுஇந்து பாம்பு சமவெளி மற்றும் மலைகள் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் [3] ஆற்றங்கரை, சதுப்புநிலம், ஈரநிலங்களில் பொதுவாகத் தென்பட்டாலும் நெல்வயல், புல்வெளி, புதர், தோட்டங்களிலும் பருவமழைக் காலங்களில் காணப்படும் இப்பாம்பு பகல், இரவு இரு நேரங்களிலும் இயங்கும்.
உணவுச் சூழலியல்
தொகுஇதன் முதன்மை உணவில் சிறிய நீர்நில வாழ்வன வான தவளை, தேரை போன்றவை முதன்மை இடம்பெற்றவை. , மேலும் மீன் , மண்புழுக்கள் போன்றவையும் இதன் உணவுப்பட்டியலில் இடம்பெற்றவை ஆகும்.[3]
இனப்பெருக்கம்
தொகுபெண் பாம்புகள் ஆகத்து ஏப்ரல் முதல் சூள் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முட்டைகள் மே முதல் செப்டம்பர் வரை நிலத்தடி துளைகளில் ஐந்து முதல் பத்துவரையான வெள்ளை நிற முட்டைகள் இடுகிறன்றன. அவவை குஞ்சு பொரிக்கின்ற வரை முட்டை அடைக்காக்கின்றன. குட்டிப் பாம்புகள் பிறந்த நேரத்தில் 13 முதல் 17 செமீ நீளம் இருக்கும். குட்டிகளின் உணவு சிறிய தவளைகள், தலைப்பிரட்டைகள், மீன்கள், மண்புழுக்கள், பூச்சிகள் ஆகியவைகள் ஆகும்.[3]
பிறமொழிகளில் பெயர்கள்
தொகு- அஸ்சாமி - பாமுனி சாப்.
- ஒரியா - ஹலாஹலிலா, மாட்டிபிராடா சாபா
- வங்காளி - ஹெலே சனப்.
- மராத்தி - நனிதி.
- தெலுங்கு - வன்னப்பாம்.
- துளு - பகிலே.
- சிங்களம் - Aharakukka
மேற்கோள்கள்
தொகு- ↑ Amphiesma stolatum at the Reptarium.cz Reptile Database
- ↑ "நல்லபாம்பு -19: சாலைகளில் முடியும் வாழ்க்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
- ↑ 3.0 3.1 3.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.