காலி தேசிய சமுத்திர நூதனசாலை

காலி தேசிய சமுத்திர நூதனசாலை அல்லது காலி தேசிய சமுத்திர அருங்காட்சியகம் இலங்கையின் உள்ள காலிக் கோட்டையில் அமைந்துள்ளது.இது ஒல்லாந்தர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் 1671 இல் நிர்மாணிக்கப்பட்ட ஒல்லாந்தர்கலின் கோட்டை பிரதான கலைஞ்சியசாலை கட்டிடத்தில் 1992 மே மாதம் 9ம் திகதி இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களத்தினால் தேசிய சமுத்திர நூதனசாலையாக நிறுவப்பட்டது. [1]பின்னர் 2004ம் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நூதனசாலையின் கடல்சார் தொல்பொருள் பகுதி முழுமையாக அழிந்து அதன் பெரும்பாலான காட்சிப் பொருற்கள் அனைத்திற்கும் சேதம் ஏற்பட்டன [2] இந்த அனர்த்தத்தின் பின்னர் நெதர்லாந்து அரசு நூதனசாலை புணரமைக்க முன்வந்து புணரமைக்க தேவையான நிதி உதவி வழங்கினார்.

காலி தேசிய சமுத்திர நூதனசாலை
Map
நிறுவப்பட்டதுமார்ச்சு 9, 1992 (1992-03-09)
அமைவிடம்காலி , இலங்கை
இயக்குனர்திரு பி ஏ சிறிபால
வலைத்தளம்www.museum.gov.lk

தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட புணரமைப்புப் பணிகளின் பின்னர் ஒல்லாந்து கலைஞ்சியசாலை கட்டிடம் (டச்சு கிடங்கு) புதுப்பிக்கப்பட்டு காலி தேசிய சமுத்திர நூதனசாலையாக 2008 ஆம் ஆண்டின் இறுதியில் மக்களின் காட்சிக்காக மீள திறக்கப்பட்டது.[3] முழுமையாகவே அழிந்து போன கடல்சார் தொல்பொருள் பகுதிக்கு பதிலாக காலி தேசிய சமுத்திர நூதனசாலையுடன் சேர்ந்தவாறு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் காலி தேசிய கடல்சார் தொல்பொருள் அருங்காட்சியகம் என புதிய ஒரு அருங்காட்சியகத்தையும் நெதர்லாந்து அரசு உதவியுடன் 2010ல் இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களம் நிறுவியது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1992 ஆம் ஆண்டிலிருந்து பொதுசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  2. http://www.icomos.org/risk/2005/4-part4.pdf
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.