கால்சிபோரைட்டு

இனோபோரெட்டு கனிமம்

கால்சிபோரைட்டு (Calciborite) என்பது CaB2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும்.

கால்சிபோரைட்டுCalciborite
பொதுவானாவை
வகைஇனோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுCaB2O4
இனங்காணல்
மோலார் நிறை125.70 கி/மோல்
நிறம்வெண்மை
படிக இயல்புபட்டகப் படிகங்கள் மற்றும் ஆரக் கொத்துகள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புஇல்லை
முறிவுசமமற்ற சங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி2.878
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.595 nβ = 1.654 nγ = 1.670
இரட்டை ஒளிவிலகல்δ = 0.075
2V கோணம்Measured: 54°
மேற்கோள்கள்[1][2][3][4]

அரிய வகை கால்சியம் போரேட்டுக் கனிமமான இது 1955 ஆம் ஆண்டு உருசியாவில் யூரல் மலைப் பகுதியிலிலுள்ள செப்பு-போரான் படிவுகளில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. [3] குவார்ட்சு தையோரைட்டு வகைப் பாறைகளில் ஊடுருவலாக சுண்ணப் பாறைகளுக்கு அருகில் ஒரு சுகார்ன் வகை கடினப்பாறையாக இது தோன்றுகிறது. மற்றொரு அரிய கால்சியம் போரேட்டுக் கனிமமான சிபிர்சுகைட்டு , கால்சைட்டு, டோலமைட்டு, கார்னட்டு, மாக்னடைட்டு மற்றும் பைராக்சீன் [4] போன்ற கனிமங்களுடன் பெரும்பாலும் சேர்ந்து காணப்படுகிறது. சப்பானின் பியுகா சுரங்கத்திலும் கால்சிபோரைட்டு கிடைப்பதாக கூறப்படுகிறது. [3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கால்சிபோரைட்டு கனிமத்தை Cbo[5] என்ற குறியீட்டால் கோல்மனைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. Calciborite Mineral Data from Webmineral
  3. 3.0 3.1 3.2 Calciborite: Calciborite mineral information from Mindat.org
  4. 4.0 4.1 Handbook of Mineralogy
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சிபோரைட்டு&oldid=4124166" இலிருந்து மீள்விக்கப்பட்டது