கால்நடை அணிகலன்கள்

கால்நடை அணிகலன்கள் என்பன, தமிழர்கள் தங்களால் வளர்க்கப்பெற்ற ஆடு, பசு, எருது மற்றும் எருமை இனங்களுக்கு அழகியல் சார்ந்து அணிவித்து அழகு பார்த்த உள்ளூர் பொருட்கள் ஆகும். இவ்வணிகலன்கள் கால்நடைகளின் உறுப்பு சார்ந்து, மூக்கு, கழுத்து, கால்கள், கொம்புகள் என அணிவிக்கப் பெறுகின்றன.

மூக்கு அணிகலன்கள்

தொகு
 
மூக்கணாங்கயிறு

எருது, காளை முதலியவற்றைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கைத் துளைத்துப் பூட்டும் கயிறு; மூக்காங்கயிறு அல்லது மூக்கணாங்கயிறு ஆகும்.

கொம்பு அணிகலன்கள்

தொகு
 
மாடுகளின் கொம்பு அணிகலன்

மாடு, ஆடுகளின் கொம்பில் அணிவிக்கப்பெறும் அணிகலன்கள் கொம்பணிகலன்கள் எனப்படும். கால்நடைகளை எளிதாகக் கையாளும் வகையில் மூக்கணாங்கயிறு அணிவிக்கப் பெறுகிறது. சிலர் இக்கயிற்றில் சங்கு அல்லது சிறு மணிகளை கட்டி விடுவார்கள்

கால் அணிகலன்கள்

தொகு

கால்நடைகளின் கால்களில் அணிவிக்கப்பெறும் அணிகலன்கள் கால் அணிகலன்கள் எனப்படும். கால்நடைகளின் கால்களில் மணிகள், சிறு மணிகள், சதங்கைகள் போன்றவை அணிவிக்கப் பெறுகின்றன.

கழுத்து அணிகலன்கள்

தொகு

கால்நடைகளுக்கு கழுத்தில் மணிகள்,சங்குகள்,கண்ணேறு கயிறுகள், தாயத்துகள் போன்றவை அணிவிக்கப்பெறுகின்றன.

பல்வேறு கழுத்து மணிகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடை_அணிகலன்கள்&oldid=2454941" இலிருந்து மீள்விக்கப்பட்டது