கால்நடை அளித்தல்

கால்நடை அளித்தல் என்பது இந்து சமயக் கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடனாகும். [1] இதற்கு பக்தர்கள் இறைவனிடம் தாங்கள் எண்ணும் காரியம் நிறைவடைந்தால் கோழி, ஆடு, மாடு போன்றவற்றை அளிப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். அவ்வாறு நிறைவேறியதும் கால்நடையை வாங்கி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கின்றனர். மிக அரிதாக மயில்[2], குதிரை போன்றவைகளையும் நேர்த்திக் கடனாக கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு பக்தர்கள் தருகின்ற கால்நடைகளைப் பராமரிக்க தொழுவங்கள் கோவில்களில் உள்ளன. தொழுவங்கள் வைத்து பராமரிக்க முடியாத கோவில்களில் கால்நடைகள் ஏலம் விடும் நடைமுறை இருந்தது. பல கோயில்களில் இறைச்சிக்காக இந்த மாடுகள் விற்கப்படுவதை அறிந்து இந்து சமய அறநிலையத் துறை 12.3.2001ல் கோயில் மாடுகளை கோசாலைகளுக்கு கொடுத்துவிட வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளது. [3]


கோயில் மாடுகள்தொகு

நேர்ந்துவிட்ட மாடுகளை கோவில் மாடுகள் என்று அழைக்கின்றனர். இந்த மாடுகளை சில கோயில் நிர்வாகம் கயிறுகளைக் கொண்டு கட்டாமல், சுதந்திரமாக விடுகின்றன. கோயில் மாடுகளுக்கு உணவளித்தால் நன்மை நிகழும் என்று சில வீடுகளிலும், கடைகளிலும் தொடர்ந்து உணவுகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்மாடுகள் அவற்றை உண்டு வாழ்கின்றன. கோவிலுக்கு வருகின்ற பக்தர்களும் தொழுவங்களில் உள்ள மாடுகளுக்கு புற்கள் மற்றும் அகத்திக்கீரையை உண்ணத் தருகின்றனர்.

சல்லிக்கட்டிற்கு கோவில் மாடுகளை விடும் வழக்கமும், அம்மாடுகள் மரணமடைந்தால் உடலடக்கம் செய்யும் வழக்கமும் உள்ளது. [4]

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. நேர்த்திக் கடன்-தமிழாய்வு தளம்
  2. சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள்- வழிபாட்டு முறைகள்- தினகரன்
  3. இறைச்சிக்காக ஏலம் போகும் கோயில் மாடுகள்! கோசாலை அமைக்கப்படுமா?-தினமணி
  4. [http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=65281 ஜல்லிக்கட்டில் வெற்றிக்கோப்பைகளை குவித்த கோயில் மாடு மரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்- நக்கீரன் 16, நவம்பர் 2011]

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடை_அளித்தல்&oldid=2077060" இருந்து மீள்விக்கப்பட்டது